தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.6.11

எங்களது போராட்டம் வன்முறைப் பாதையில் செல்லக் கூடியதல்ல : ராம்தேவுக்கு ஹசாரே கண்டனம்!

அகமது நகர்: ராம்தேவின் பேச்சால் அன்னா ஹஸாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பெரும் சங்கடமாகியுள்ளது. ராம்தேவின் அறிவிப்பு குறித்து அன்னாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் செய்தியாளர்களிடம் அன்னா பேசுகையில், வன்முறையை வெறுப்பவன். ஆயுதப் படையை உருவாக்குபவருடன் நான்
ஒருபோதும் இணைந்து பணியாற்ற மாட்டேன். நான் ராம்தேவை இப்போதைக்கு சந்திக்கவும் போவதில்லை. இதனால் எங்களது அமைதிப் போராட்டத்திற்கு களங்கம் ஏற்படக் கூடும். நானும் சரி, ராம்தேவும் சரி ஊழலுக்கு எதிராக போராடி வருகிறோம். அதேசமயம், எங்களது போராட்டம் வன்முறைப் பாதையில் செல்லக் கூடியதல்ல. என்றார் அன்னா.

0 கருத்துகள்: