சோமாலியாவில் போராலிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் பலியானார்.
ஆப்பிரிக்க சோமாலியா நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அபிசகுர் சேக் ஹசன். இவர் தலைநகர் மொகதிசு நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து காரில் வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீடு அருகே பதுங்கியிருந்த
பெண் மனித வெடிகுண்டு ஒருவர் திடீர் தாக்குதல் நடத்தினார். அதில் தலையிலும், கால்களிலும் வெடிகுண்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக பெனிடீர் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்ததார். இத்தகவலை சோமாலியா நாட்டின் அரசு ரேடியோவும் உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது.உலகில் மிகவும் வறுமை மிக்க நாடு சோமாலியா. இங்கு கடந்த 1991-ம் ஆண்டிலிருந்து நிலையற்ற அரசு உள்ளது. இஸ்லாமிக், ஷகாரி என இரு சட்டங்கள் உள்ளன. இதனால் இரு பிரிவாக செயல்பட்டு வருவதால் அதில் ஒரு பிரிவினர் அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பினர் தான் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக