புதுடெல்லி, ஜூன். 12- ஒரு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு ராம்தேவுக்கு பக்குவம் போதாது என்று காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இந்நிலையில் அன்னா ஹசாரே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஊழலுக்கு எதிராக ராம்தேவ் நடத்தும் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அவரை போல நான் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத் அமைப்புகளை சார்ந்து இருக்க மாட்டேன். ஆர்.எஸ்.எஸ்.க்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆயுத பயிற்சி கொடுப்போம் என்று ராம்தேவ் கூறுவதை எங்களால் ஏற்க இயலாது.
பாபா ராம்தேவ் எதையும் யோசிக்காமல் பேசி விடுகிறார். ஒரு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு அவருக்கு பக்குவம் போதாது. ராம்தேவுக்கு யோகாவில் மட்டுமே நிபுணத்துவம் உள்ளது. அதை விடுத்து அவருக்கு வேறு எதிலும் அனுபவம் இல்லை. சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றால், பல விசயங்களில் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அந்த படிப்பினையை ராம்தேவ் இன்னும் படிக்கவில்லை. அவரிடம் யோசிக்காமல் உடனுக்குடன் முடிவு எடுத்து விடும் பழக்கம் உள்ளது. அதனால்தான் போராட்டம் திசை மாறி விட்டது. எனவே மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அவருடன் பேச்சு நடத்த வேண்டும்.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வரும் பாபா ராம்தேவுக்கு காந்தியவாதி அன்னா ஹசாரே ஆதரவு தெரிவித்தார். ராம்தேவ் மீதும், உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து அன்னா ஹசாரே உண்ணா விரதம் இருந்தார். ஊழலை ஒழிக்கும் போராட்டத்தில் அன்னா ஹசாரேயும், ராம்தேவும்
ஒரே நிலைபாட்டுடன் இருந்தாலும், சமீபத்தில் ராம்தேவ் நாடெங்கும் 11 ஆயிரம் பேரை திரட்டி ஆயுதப் பயிற்சி அளிக்கப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இந்நிலையில் அன்னா ஹசாரே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஊழலுக்கு எதிராக ராம்தேவ் நடத்தும் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அவரை போல நான் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத் அமைப்புகளை சார்ந்து இருக்க மாட்டேன். ஆர்.எஸ்.எஸ்.க்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆயுத பயிற்சி கொடுப்போம் என்று ராம்தேவ் கூறுவதை எங்களால் ஏற்க இயலாது.
பாபா ராம்தேவ் எதையும் யோசிக்காமல் பேசி விடுகிறார். ஒரு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு அவருக்கு பக்குவம் போதாது. ராம்தேவுக்கு யோகாவில் மட்டுமே நிபுணத்துவம் உள்ளது. அதை விடுத்து அவருக்கு வேறு எதிலும் அனுபவம் இல்லை. சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றால், பல விசயங்களில் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அந்த படிப்பினையை ராம்தேவ் இன்னும் படிக்கவில்லை. அவரிடம் யோசிக்காமல் உடனுக்குடன் முடிவு எடுத்து விடும் பழக்கம் உள்ளது. அதனால்தான் போராட்டம் திசை மாறி விட்டது. எனவே மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அவருடன் பேச்சு நடத்த வேண்டும்.
அரசை எதிர்த்து போராட்டம் நடத்த ராம்தேவுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அதை உரிய முறையில் செய்ய வேண்டும். போராட்டத்தில் ஒத்த கருத்து உடையவர்களுடன் பேசி, விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஒரு போராட்டத்தை இப்படித்தான் நடத்த முடியும். ஆனால் ராம்தேவ் எண்ணமும், போராட்டமும் எங்களது எண்ணத்துக்கு ஒத்துப் போகவில்லை. எனவேதான் ராம்தேவ் உண்ணாவிரத போராட்டத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டு விட்டது. அது அரசுக்கு சாதகமாகி உள்ளது. இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக