
வெற்றி பெறுவதற்குமுன் இருந்த பணிவு, அடக்கத்தைவிட
வெற்றிபெற்றபின் அந்த நற்குணங்கள் அதிகமாக இருக்கவேண்டும். அந்த நன்னடத்தைக்கு அந்தந்த கட்சியின் தலைவர்களே எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்.
ஏகபோக திமிருக்கும், அகந்தைக்கும் உதாரணமாக திகழ்வது அவர்களின் சுருக்கமான அரசியல் வாழ்க்கைக்கு காரணமாக அமைவது மட்டுமல்லாமல் அவர்களை வரலாறும் ஏகடியம் செய்யும்.
தலைவனாய் வருதல் விபத்து தலைவனுக்குண்டான பண்புகளை தனதாக்கிக்கொல்வதில்தான் தலைமைத்துவம் அடங்கியுள்ளது. அதுதான் மகத்துவமும் கூட.
மனதில் வரும் உணர்வுகளையெல்லாம் செயலாக்கிச்சென்றால்..... அது தலைவனின் பண்பல்ல. இன்று பதவிக்கு வந்த இவர்களின் செயல்களின் பரிணாமங்களை, அதன் முடிவுகளை 4 ஆம் வருட முடிவில் காண்போம்.
அ.இ.அ.தி.மு.க. வின் உறுப்பினர்களும் அவர்களின் தலைவியுமான செல்வி ஜெயலலிதாவும் முன்னாள் முதல் அமைச்சரை அவரின் கடந்த கால எல்லா நடவடிக்கைகளையும் விமரிசிப்பதும், மாற்றி அமைப்பதும் ஒரு உயர்ந்த தன்மைக்கு உரியதன்று.
எனவே, ஒப்பாரும், மிக்காரும் இல்லா ஒரு உன்னத ஆட்சியை கொண்டுவர தனக்கடுத்து சுயநலமில்லா சான்றோரின் சகவாசம் வேண்டும்.
தான் பெரும்பான்மை பெற்றதினால், சிறுபான்மை அவையவரின் வேண்டுகோளுக்கு செவி மடுக்காது தான்தோன்றித்தனமாய் செய்யும் செயல்கள் நல்லனவல்ல. இது ஒரு பேரினவாதத்தின் மற்றொரு முகமாகவே நல்லோரால் காணப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக