தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.6.11

இலங்கைக்கு முழு ஆதரவு: ரஷ்ய அதிபர்


இலங்கைக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் ரஷ்யா முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று ரஷ்ய அதிபர் திமித்ரி மெட்வேதேவ் கூறியுள்ளார்.
இத்தகவல் அதிபர் ராஜபட்சவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் ராஜபட்ச, நேற்று
மாலை ரஷ்ய அதிபரை சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கைக்கு தேவையான சந்தர்ப்பங்களில் ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று ரஷ்ய அதிபர் திமித்ரி மெட்வேதேவ் தெரிவித்தார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள லெனெக்ஸ்போ அரங்கில் சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டபோது, ரஷ்ய அதிபரை ராஜபட்ச சந்தித்தார். ரஷ்யாவின் ஆதரவு நிலைக்கு ராஜபட்ச நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்: