தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.6.11

மனித கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்காதீர்: பிரதமர்

புதுடெல்லி, ஜூன். 18-  மனித கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க, பிற்பட்டோர் வன்கொடுமை சட்டப்படி நடவடிக்க எடுக்க தயங்காதீர் என்று, மாநில மந்திரிகள் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
டெல்லியில், மாநில சமூக நலத்துறை மந்திரிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-
பிற்பட்டோர், மலைவாழ்
மக்கள் நலனில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக பிற்பட்டோர் அதிகம் வாழும் கிராமங்களை தேர்ந்து எடுத்து, அந்த கிராமங்களை முன்னேற்றம் அடையச்செய்யும் திட்டத்தை, மத்திய அரசு தனது 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் நிறைவேற்ற இருக்கிறது. இந்த முன்மாதிரி திட்டம் தமிழ்நாடு, அசாம், பீகார், இமாசல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், 1,000 கிராமங்களில் நிறைவேற்றப்படும்.
மனித கழிவை மனிதனே சுமக்கும் நிலை எக்காரணம் கொண்டும் பிற்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் ஏற்படக்கூடாது. இதை தடுக்க பிற்பட்டோர்-மலைவாழ் மக்கள் வன்கொடுமை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 6 மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும். இதுபற்றி அனைத்து முதல்-மந்திரிகளுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன். இந்தியா சுதந்திரம் பெற்று 64 ஆண்டு ஆகிறது. இனிமேலும், மனிதனே மனித கழிவை சுமக்கும் நிலை இருக்க கூடாது. இதை தடுக்க, கிராமங்களில் நவீன கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும். நவீன கழிவறைகள் இல்லாத வீடே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமங்களில் பிற்பட்டோர், மலைவாழ் மக்கள், இதர பிற்பட்டோர் இன மாணவர்கள் உயர் கல்வி படிக்க மத்திய அரசு வழங்கும் உதவிப்பணம் பெறுவதற்கான வருமான வரம்பு குறைக்கப்படும். மூத்த குடிமக்கள், வருமானம் குறைந்தோர் நலனையும் மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுடைய முன்னேற்றத்துக்கும் பாடுபட வேண்டும். இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

0 கருத்துகள்: