புதுடெல்லி, ஜூன். 19- இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தனது சொத்து விவரத்தை விரைவில் அறிவிக்க முடிவு செய்து இருக்கிறார்.
இதுபற்றி ஜனாதிபதி மாளிகையின் செய்தி தொடர்பாளர் அர்ச்சனா தத்தா நிருபர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் யாரும் சொத்துக்கணக்கை அறிவிக்கும் படி கோரவில்லை. அவராகவே முன்வந்து, தனது சொத்துக்கணக்கை விரைவில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார் என்று தெரிவித்தார். ஜனாதிபதி குடும்பத்தினரின் சொத்துக்கணக்கு வெளியிடப்படுமா? என்ற கேள்விக்கு, செய்தி தொடர்பாளர் எந்த பதிலும் கூறவில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக