இஸ்ரேலை யூதர்களின் தேசம் என்று பலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ளாத வரை அரபு-இஸ்ரேலிய முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ வலியுறுத்தியுள்ளார்.
"ஒருசில கிலோ மீற்றர் வரையுள்ள நிலப்பகுதிக்காக இஸ்ரேல் சண்டைபிடிக்கப் போவதில்லை" என்றும், "இஸ்ரேல் யூதர்களின் தனிநாடு என்பதை பலஸ்தீனர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்."மேற்குக் கரையில் இருக்கும் மஹ்மூத் அப்பாஸின் அரசும் இதற்கு விதிவிலக்கானதல்ல. இஸ்ரேல் ஒரு யூத நாடு என்பதை அப்பாஸ் ஏற்காது போனால், அவருடன் எந்த ஒரு உடன்படிக்கையும் சாத்தியமில்லை" என இஸ்ரேலிய தினசரியான ஹாரெட்ஸிடம் நெத்தன்யாஹூ கருத்துரைத்துள்ளார்.
இதேவேளை, மத்திய கிழக்கில் அரபுகளுடன் சமாதானமாக இணைந்து வாழ்வதற்கான சகல வாய்ப்புக்களையும் நெத்தன்யாஹூ குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக இஸ்ரேலிய நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க் கட்சித் தலைவி திசிபி லிவ்னி காரசாரமாகக் குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக