தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.6.11

இலங்கைக்கு எதிரான சக்திகளுக்கு ஒரு போதும் ஆதரவளிக்க மாட்டோம் : சீனா



இலங்கைக்கு எதிரான சக்திகளுக்கு ஒரு போதும் ஆதவளிக்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஹூஜி ஜிண்டாவோ, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் உத்தரவாதம் அளித்துள்ளார்.
பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவை இன்று, மொஸ்கோவில் வைத்து சீன ஜனாதிபதி சந்தித்தார். அப்போது நிபுணர் குழு அறிக்கை விவகாரத்தில் சீனாவின் தொடர்ச்சியான
ஆதரவுக்கு மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்தார்.

அதன் போது பதில் அளித்துள்ள சீன ஜனாதிபதி, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளை சீனா வன்மையாக எதிர்க்கும் என உறுதியளித்தார்.

போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை பக்க சார்பற்ற சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் பல வலியுறுத்தி வருகின்ற போதும், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என கூறி வருவதுடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தேவையில்லை எனவும் வலியுறுத்திவருகின்றன.

0 கருத்துகள்: