தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.5.11

மாநில புதிய தேர்தல் ஆணையாளராக சோ.அய்யர் நியமனம்!


தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ.அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியின் போது மாநில தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட சையத் முனீர் ஹோடா, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மே.27ம் திகதி முதல் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு சோ.அய்யர் தேர்தல்
ஆணையாளராக இருக்கும் வகையில், ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆணை பிறப்பித்துள்ளார்.

அடுத்து வரும் சில மாதங்களில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு பொதுத்தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பொறுப்பை சோ.அய்யர் ஏற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக அவர் கரூர்,மதுரை மாவட்டங்களின் ஆட்சியராக இருந்ததுடன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் இணை இயக்குனராகவும் இருந்தவர். மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயற்படுத்தியமைக்காக தமிழக அரசுக்கு 2 ஆண்டுகள் மத்திய அரசு விருது கிடைப்பதற்கு இவரும் முக்கிய காரணமாவார்.

2003 இல் டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக இருந்த சோ.அய்யர், டாஸ்மார்க் கடைகளையும், பார்களையும் முறைப்படுத்தி, டாஸ்மார்க் கடைகளை அரசே ஏற்று நடத்தும் திட்டத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டு நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: