தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.5.11

நீதிக்குப் புறம்பான தமிழினப் படுகொலைகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காணொளிகளாக காண்பிக்கப்படவுள்ளன!



சரணடைந்த தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவத்தினர் கோரமாக படுகொலைசெய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி நாளை முப்பதாம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் காண்பிக்கப்படவுள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள்
தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் இந்த காணொளியை அதன் உண்மைத்தன்மை தொடர்பில் நிபுணர்கள் ஆராய்ந்து சமர்ப்பித்த ஆதரங்களுடன் நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியாக கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் நியமனம் பெற்ற பின்னர் அவர் சமர்ப்பிக்கும் முதலாவது ஆவணம் இதுவாகும்.
இந்த காணொளிகளை பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியிருந்தது. கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் கடந்த வருடம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டபோதும், சிறீலங்கா அரசு அதற்கான அனுமதிகளை வழங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: