பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதனர். ஆனால் அவரை ரிமோர்ட் கண்ட்ரோல் போல இயக்குபவர்கள் தான் பிரச்சினைக்குரியவர்கள் என லோக்பால் சட்ட மசோதா குழுவின் தலைவர்களில் ஒருவரும், காந்தியவாதியுமான அனா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இம்மாநாட்டை ஊழலுக்கு எதிரான இந்திய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது அனா ஹசாரே தெரிவிக்கையில், எந்த அரசாக இருந்தாலும் மக்கள் சக்தி தான் பலம் வாய்ந்தது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், ஒரு நல்ல மனிதர். ஆனால் பிரச்சினைகள் உருவாகுவதற்கு பின்னாலிருந்து இயக்கும் ரிமோட்கண்ட்ரோல் தான் காரணம். லோக்பால் சட்ட மசோதா உருவாக்கும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளை 50 சதவீதம் அளவுக்கு சேர்த்துக்கொள்ல மத்திய அரசு இறுதியாக இறங்கி வந்தது. ஆனால் அரசிடம் இருந்து பல்வேறு பிரச்சினைகளை அந்த குழு இன்னமும் எதிர்கொண்டு வருகிறது.அக்.16ம் திகதிக்குள் லோக்பால் சட்டமசோதா நிறைவேற்றப்படா விட்டால், மீண்டும் ஜந்தர்மந்தரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்போகிறேன். ஊழலுக்கு எதிராக நான் பிரச்சாரம் செய்துவருவதால், இதுவரை 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த 6 பேரும் என்னை பழிவாங்க துடிக்கிறார்கள். ஆனால் கறைபடியாதவன் என்பதால் என்னை அவர்களால் நெருங்க முடியவில்லை. என அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக