தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.5.11

ஆப்கானில் நேட்டோ படைகளது இராணுவ கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்!


ஆப்கானிஸ்தானில் பொலிஸ் அதிகாரியின் சீருடையில் தலிபான் தீவிரவாதி ஒருவன் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில், இராணுவ உயர் அதிகாரிகள்
இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், ஜேர்மனிய ஜெனரல் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆப்கானி எஞ்சியுள்ள அமெரிக்க படைகளும், படிப்படியாக குறைக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று சனிக்கிழமை வடக்கு ஆப்கானில் நேட்டோ கூட்டுப்படைகள் கலந்துகொண்ட முக்கிய இராணுவ அதிகாரிகளின் கூட்டம் ஒன்றில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டகார் மாநில கவர்னர் மாளிகையில், ஆப்கானிஸ்தான் உயர் இராணுவ அதிகாரிகளுடன் நேட்டோ கூட்டுப்படை அதிகாரிகள் இக் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

அந்நேரம், காவற்துறையினரின் சீருடையில் திடீரென கூட்டத்தில் உள்நுழைந்த குறித்த தலிபான் தற்கொலைக்குண்டு தாரி குண்டை வெடிக்க வைத்துள்ளான். இதற்கு முன்னைய தாக்குதல் ஒன்றில் இரண்டு ஜேர்மனிய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், இத்தாக்குதலும் இடம்பெற்றிருக்கிறது.

இராணுவத்தினரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில், நடைபெற்ற இக்கூட்டத்தில் தற்கொலை குண்டுதாரியால் நுழைய முடிந்துள்ளது குறித்து ஆப்கான் படைகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

0 கருத்துகள்: