தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.5.11

ஒசாமா தொடர்பான விசாரணையை போலீசாரிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் ஏற்றது


இஸ்லாமாபாத் அருகே, கொல்லப்பட்டஒசாமா பின்லாடன் வசித்து வந்தது தொடர்பான விசாரணையை போலீசாரிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் ஏற்றது. ஒசாமா வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் உட்பட 11 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இஸ்லாமாபாத் அருகே ராணுவ கோட்டையாக விளங்கும் அபோதாபாத்தில்,  ஒசாமா பின்லாடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றது.
இச்சம்பவத்தால், பாகிஸ்தான் அரசும், ராணுவமும் அதிர்ச்சியில் உள்ளது. ஆரம்பத்தில் இது தொடர்பான விசாரணையை, அந்நாட்டு போலீசார் மேற்கொண்டனர். தற்போது, ராணுவம் விசாரணை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையின் முதல் கட்டமாக, ஒசாமா வசித்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் உட்பட 11 பேரை, காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. பக்கத்து வீட்டுக்காரர் ஒசாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் பஇயக்கத் தலைவர் சயித் சலாவுதீன் பயன்படுத்தி வந்த வீடு, பாதுகாப்பு வசதிகளுக்காக ஒசாமாவுக்கு அளிக்கப்பட்டதாக கனடா பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்நிலையில், விசாரணையை போலீசாரிடமிருந்து ராணுவம் ஏற்று இருப்பது சந்தேகத்தையும், நம்பிக்கையில்லா தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிரடிப் படையினர் விட்டுச் சென்ற சடலங்களில், இருவர் வீட்டு உரிமையாளர்கள், மூன்றாம் நபர் ஒசாமாவின் மகன் என்றும், நான்காவது நபர் பெண் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால், இதற்கு மாறாக, நான்காவது நபர் ஆண் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், இந்த வீடு, அல்-காயிதா போராளிகளுக்கு  பாதுகாப்பான இடம் என்று ஆப்கன் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வீட்டில், தலிபான் அமைப்பு கமாண்டர் மவ்லி அப்துல் கபீர் வசித்து வருவதாக கருதி உள்ளனர்.அபோதாபாத் அருகில், ஹர்ல்பூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி, இந்த வீட்டின் ரகசியங்களை ஆப்கன் ஏஜன்டுகள் திரட்டி வந்துள்ளனர்.
உலக நாடுகளின் கோபம் தற்போது பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ள நிலையில், பாகிஸ்தானின் ராணுவ தலைமை ஜெனரல் அல்பாக் பர்வேஸ் கயானி மற்றும் ஐ.எஸ்.ஐ., தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது நூஜா பாஷா இருவரும் அமைதி காத்து வருகின்றனர். இது தொடர்பாக, அதிபர் ஆசிப் அலி சர்தாரியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிர்டஸ் ஆசிக் அவான் கூறுகையில், "மலைப்பகுதி என்பதாலும், மேலும், மரத்திற்கு மேல் பறந்து சென்றதாலும் ரேடாரின் கண்காணிப்பில் இருந்து, அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தப்பிவிட்டன" என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: