தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.5.11

ஆப்கனில் பொதுமக்கள் பலி: மன்னிப்பு கேட்டது நேட்டோ


தென்-மேற்கு ஆப்கானிஸ்தானில் விமானத்தாக்குதல் ஒன்றில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆப்கனில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
பொதுமக்களின் உயிரிழப்பை தடுப்பதற்குத்தான் நேட்டோ அதிகபட்ச
முன்னுரிமை அளிக்கும். இந்த சம்பவத்தை அது மிகவும் கடுமையாக எடுத்துக்கொண்டுள்ளது என ஜெனரல் டேவிட் பீட்ரஸ், லெப்டினன்ட் ஜெனரல் டேவிட் ரோட்ரிகஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாலும், ஒரு வளாகத்தினுள் 5 பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதாலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வளாகம் பொதுமக்கள் வசித்து வந்த வளாகம் என அமெரிக்க கடற்படை மேஜர் ஜெனரல் ஜான் டூலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விமானத் தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்ததாக டூலன் தெரிவித்தார். எனினும் 12 குழந்தைகளும், 2 பெண்களும் உயிரிழந்ததாக ஆப்கன் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: