தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.5.11

இலவச அரிசி திட்டம் : ஜூன் 1ம் திகதி முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைக்கிறார்



 ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஜூன் 1ம் திகதி முதல் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தால் இந்த அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று முதல்- அமைச்சராக ஜெயலலிதா கடந்த 16-ந்தேதி பதவி ஏற்றதும் 7 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கிய உத்தரவு இலவச அரிசி வழங்கும் திட்டமாகும். அரிசி பெற தகுதி உடைய அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்படும்
என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதேபோல் அந்தியோதையா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அரிசி பெறுபவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதற்கான அரசாணை கடந்த 17-ந்தேதி வெளியிடப்பட்டது.

இதையொட்டி இந்த திட்டம் ஜுன் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று உணவுத்துறை உத்தரவிட்டது. அதன்படி இலவச அரிசி வழங்கும் திட்ட தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளில் உணவு, கூட்டுறவுத்துறை அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஆழ்வார் பேட்டை 115-வது வட்டம் ஸ்ரீராம் காலனியில் உள்ள ரேஷன் கடையில் 1-ந் தேதி இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

0 கருத்துகள்: