தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி வேட்பாளர் செந்தூஸ்வரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் திருவெறும்பூர் திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து அரியமங்கலம், திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். பின்னர் அவர்பேசியதாவது,
இன்றைக்கு கருணாநிதி டிவியில் என்னை பற்றி தவறாக பிரசாரம் செய்தார்.
உண்மையில் நான் பேசியது அனைத்தையும் அவர் டிவியில் ஒளிபரப்ப தயாரா? இன்று எல்லோருக்கும்தான் பிரச்சினை இருக்கிறது. பிரச்சினை இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஏன்? அங்கே கூட பேரனுக்கும் தாத்தாவுக்கும் கூட சண்டை இருக்கிறது. ஆனால், இருவரும் சேர்ந்து கொள்ளவில்லையா? அதை போலதான் எல்லா கட்சிக்குள்ளேயும் பிரச்சினை வந்து கொண்டு இருக்கிறது. அவர் விஜயகாந்த்தைதான் குறி வைக்கிறார் என்றால் நான் என்ன செய்வது? எங்கள் கூட்டணியில் குழப்பம் உண்டாக்குவதும், பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் உளவுத்துறை மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.அப்படி ஒன்றும் ஒருநாளும் நடக்காது. நான் எங்கள் கட்சி வேட்பாளரை அடிக்கிறேன் என்றால் இவர்களுக்கு என்ன? இவர்களை நான் அடித்தேனா? எனது கட்சியினரை அடிப்பேன், உதைப்பேன் யாரும் ஒன்றும் சொல்லாதபோது, உங்களுக்கு ஏன் வலிக்கிறது? எங்கள் கட்சிக்காரர்களை சேர்ந்தவர்கள் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியை போன்று குறைசொல்லி பேசினார்கள் டிவியில் ஒளிபரப்புகின்றனர்.
எங்கள் கட்சிகாரர்கள், கூட்டணி கட்சிகாரர்கள் யாரும் விமர்சனம் செய்தது கிடையாது. இவர்களை போய் பிரசாரம் செய்து தொண்டர்களை உணர்ச்சி வரப்பட பார்க்கிறார்கள்.
திருவொறும்பூர் பகுதியில் தொழில்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் இங்கு நடக்கும் உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு, பிரச்சினைகள் தீர்க்கப்படும். தமிழகத்தில் எங்கள் கூட்டணி மிகச்சிறப்பாக செயல்படுகிறது என்று கூறினார்.
ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதி திருவாணைக்கா பகுதியில் விஜயகாந்த் பேசியதாவது,
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர் வெற்றி பெற்ற உடன் இந்த தொகுதிக்கு அவர் நல்லது செய்வார். நீங்கள் கேட்டதையும், கேட்காததையும் செய்வார். எனது குரு எம்ஜிஆர் தொடங்கிய கட்சியுடன்தான் நான் கூட்டணி வைத்துள்ளேன். கருணாநிதி 6வது முறையாக்க ஆகுவதற்கு பிரசாரம் செய்கிறார். அவர் 5 முறை இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தார். கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, வறுகையை ஒழிக்க வில்லை. ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவதால், திருவாணைக்கா பகுதியில் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. அகிலம் என்றால் உலகத்தையே காக்கும் கோயில் என்று பொருள்.
மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தால் நாடு கெட்டுவிடும் என்றார் அவர்.
'படத்துல நான் பன்ற காமெடியெல்லாம் அவனுங்க நிஜத்துல பண்ணிக்கிட்டிருக்காய்ங்க.' - நடிகர் வடிவேலு
இதேவேளை விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளரை பிரச்சார கூட்டமொன்றில் வைத்து அடித்த காட்சி தொடர்பில், நடிகர் வடிவேலு மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து நடிகர் வடிவேலு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை மற்றும் ஜாம்பஜார் பகுதியில் இன்று பிரசாரம் செய்த போது விஜயகாந்த் பற்றி வடிவேலு இப்படி கூறினார்.
'என்கிட்ட அடிவாங்கினவங்கப் பூரா மகாராஜா ஆகிடுவான்னா..? அப்ப என்னத்துக்கு உனக்கு கட்சி ஆபீஸு? கல்யாண மண்டபத்துக்கு வரிசையா வரச்சொல்லி நிற்க வைச்சு, முதுகுல நாலு குத்து, மூக்குல நாலு குத்தி மகாராஜா ஆக்கிவிட வேண்டியது தானே..! எதுக்கடா எலெக்ஷனு?
கூட்டணியையே கலைங்க..? கூட்டணி தலைவரெல்லாம் வரச்சொல்லி வாயிலையே குட்டு, குட்டி மகாராஜா ஆக்கிவிடு.. நான் பன்ற காமெடி பூரா அவங்க பண்ணிக்கிட்டிருக்காட்ங்க.. ஒருத்தன போட்டு அடிக்கிறாய்ங்க... மேடையில ஏத்திவைச்சு மக்கள் முன்னால குட்டுகுட்டுன்னு குட்டுறான் இந்தாளு..! இந்த தேர்தல் அதிகாரிகளெல்லாம் எண்ண பண்ணிக்கிட்டிருக்காய்ங்க? என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக