துபாய்: ‘ஸ்பைடர்மேன்’ அலைன் ராபர்ட் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமான துபாயில் புர்ஜ் கலீஃபாவில் ஏறி சாதனை படைத்துள்ளார்.ஆறு மணிநேரத்தில் 828 மீட்டர்-(2,717 அடி) உயரமுள்ள புர்ஜ் கலீஃபாவின் உச்சிக்கு சென்றடைந்தார் பிரான்சை சார்ந்த அலைன் ராபர்ட்.
ராபர்ட்டின் சாகசத்தை நேரடியாக காண்பதற்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அதிகாரிகளின் பாதுகாப்பு
கட்டளைகளை பேண வேண்டிய சூழல் ஏற்பட்டதால் முதல் முறையாக ராபர்ட் பாதுகாப்பு கவசத்தையும், கயிறையும் உபயோகித்தார்.கண்ணாடியால் பொதியப்பட்ட வெள்ளி நிறத்திலான புர்ஜ் கலீஃபாவின் வெளிப்புறத்தில் கைகளால் பிடித்து கால்களை பதித்து முன்னேறிய ராபர்ட் உச்சிக்கு சென்றவுடன் சாதனைப் படைத்த மகிழ்ச்சியில் கைகளை உயர்த்தி பார்வையாளர்களிடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
நியூயார்க்கில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் உட்பட 70க்கும் மேற்பட்ட ஸ்கை ஸ்க்ரேப்பர்ஸ் என்றழைக்கப்பட்டும் விண்ணைமுட்டும் கட்டிடங்களில் ஏறியுள்ள 48 வயதான அலைன் ராபர்ட்டை ‘ஸ்பைடர்மேன்’ என பட்டப் பெயர் சூட்டி அழைக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக