தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.4.11

இந்தியாவுடனான இறுதி போட்டியை காண இலங்கை அதிபர் ராஜபக்ச மும்பை வருகிரார்!


முதன் முதலாக ஆசிய நாடுகளின் இரண்டு (இந்தியா - இலங்கை) அணிகள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் விறுவிறுப்பான ஆட்டம்,
மும்பையில் எதிர்வரும் ஏப்ரல் 2 ம் திகதி நடைபெறுகிறது. இப்போட்டியை காண இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மும்பை வரவுள்ளனர்.

இலங்கை-நியூசிலனது இடையே செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அரையிறுதி
போட்டியை காண இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவரது மூன்று மக்ன்களும் நேரடையாக மைதானத்திற்கு விஜயம் செய்திருந்தனர். தற்போது இறுதிப்போட்டியை காணவும் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இம்முறை உலக கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருக்கும் முத்தையா முரளிதரனுக்கு காணிக்கையாக உலககோப்பையை வெல்ல வேண்டும் என மகிந்த ராஜபக்ச விரும்புவதாக அவரது செய்தி தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியை காண பாகிஸ்த்தான் பிரதமர் கிலானி மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மைதானத்திற்கு விஜயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: