நேட்டோ படையினரால் தான் இப்போது எங்களுக்கு பிரச்சினை வருகிறது என லிபிய புரட்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் லிபிய புரட்சி படைத்தலைவர் அப்டெல் ஃபட்டாஹ் யௌன்ஸ் தெரிவிக்கையில்,
நேட்டோ கூட்டுப்படை மிக மெதுவாக தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது கடாபி படைகளுக்கு நல்ல வாய்ப்பாக மாறிவிட்டது. மிஸ்ராட்டா நகரில் தினந்தோறும் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். கடந்த மார்ச் 31ம் திகதி வரை, அமெரிக்கா - இங்கிலாந்து - பிரான்ஸ் பொறுப்பிலிருந்த வெளிநாட்டு துருப்புக்கள் தாக்குதல்களை மிக துரிதகரமாக முன்னெடுத்து வந்தன. இப்போது நேட்டோ படை வசம், தாக்குதல் பொறுப்பு மாற்றம் பெற்றதை தொடர்ந்து இத்தாமதம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
ஓர் இடத்தில் தாக்குதல் மேற்கொள்ள வேண்டுமாயின், அங்கிருக்கும் படையினர், தமது தலைமையிடம் கேட்கின்றனர். தலைமை வகிப்பவர்கள் நேட்டோ பெரியவர்களிடம் கேட்கின்றனர். அவர்கள் யோசித்து விட்டு ஆம் என கட்டளையிடுவதற்குள் 8 மணித்தியாலங்கள் கடந்து விடுகிறது என அவர் தெரிவித்தார்.
இதேவேளை லிபிய வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ள மௌஸா இப்ராஹிம், சவையாஹ் நகரில் நடைபெறும் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பதை முதற்
இதேவேளை லிபிய வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ள மௌஸா இப்ராஹிம், சவையாஹ் நகரில் நடைபெறும் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பதை முதற்
தடவையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், கடாபி துருப்பினரின் தாக்குதலிலும் பார்க்க, கூட்டுப்படை தாக்குதலிலேயே அதிகம் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை லிபியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் இணை வெளிவிவகார அமைச்சர் அப்டெலட்டி ஒபெய்டி நியமிக்கப்பட்டுள்ளார்
மூஸா கூஸா தான் பதவி விலகுவதாக இங்கிலாந்தில் வைத்து அறிவித்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மூஸாவிற்கு வயதாகிவிட்டது. அவருடைய பேச்சுக்களும் பழசாகிவிட்டது என கடாபியின் மகன் செஃப் அல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக