தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.3.11

லிபியா - மேற்குல நாடுகளின் யுத்தத்திற்கு எதிர்ப்பு - பான் கீ மூன் போர்க் குற்றவாளி - விமல் வீரவன்ச


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகம் முன்னபாக, லிபியா மீது  மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில், தேசிய சுதந்திர முன்னணியால்  மேற்கொள்ளப்பட்ட இந்த ஆரப்பாட்டத்தில், மேற்குலகத் தலைவர்கள் பலரையும் கண்டிக்கும் வகையிலான  பதாகைகள், சுலோகங்கள்  காணப்பட்டன.
லிபியா மட்டுமல்லாது, எந்த நாட்டினதும் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் செயற்பட எந்தவொரு நாட்டிற்கும், அமைப்பிற்கும் அதிகாரமில்லை. அவ்வாறிருக்கையில் லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதல்கள் அநீதியானவை.
லிபியாவின் எண்ணை வளத்தைக் குறிவைத்து, மேற்குல நாடுகள் தொடுத்திருக்கும் இந்த யுத்தத்திற்கு ஐ.நா. அனுமதி அளித்திருப்பதன் மூலம், ஐ.நா. செயலாளர் பான் கீ மூனும் யுத்தக் குற்றவாளிகியுள்ளார் எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த அமைச்சர் விமல் வீரவன்ங்ச.
ஏனைய நாடுகளில் போர்க்குற்றங்களைத் தேடும் இந்நாடுகள், தாங்கள் மேற்கொண்டு வரும் போர்க்குற்றங்களை எவ்வாறு நியாயப்படுத்தப் போகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

0 கருத்துகள்: