தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.3.11

நிலமை கை மீறிவிட்டது போரை நிறுத்து சீனா ஆவேசம் !


லிபியாவில் இப்போது நடைபெறும் போரை உடனடியாக நிறுத்தி சமாதானப் பேச்சுக்களை ஆரம்பியுங்கள் என்று சீனா பலமாக அலறியுள்ளது. ஐ.நா தீர்மானம் லிபிய விமானங்கள் வானத்தில் பறப்பதை தடை செய்வதை மட்டுமே வலியுறுத்தியுள்ளது. ஆனால் மேலை நாடுகளின் படைகள் அதை பிழையாக கற்பிதம் பண்ணி தரை மீதும் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கின்றன. இது தவறான செயல் உடனடியாக இரு தரப்பும் யுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டுமென அலறியுள்ளது. மேலும் சீன வெளிநாட்டு அமைச்சர் யான் யூ கூறும்போது இந்த விவகாரம் மற்றய இடங்களுக்கும் பரவப்போகிறது என்று தாம் அச்சமடைவதாகவும் கூறினார். நிலமைகளை கட்டுக்குள் கொண்டுவர தாம் அடுத்த பக்கத்தால் பேசி வருவதாகவும், லிபியா இறைமை உள்ள நாடு அதன்
மீது இத்தகைய தாக்குதலை நடாத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
சீனாவிற்கு ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் உள்ளதால் சீனா அடுத்த கட்டங்களில் அதை பிரயோகிக்கலாம். ஆனால் சீனாவிற்கு ஒரு வாய்ப்பை கொடுக்காமல் இரகசியமாக மேலை நாடுகளின் படைகள் லிபிய தரையில் இறங்கிவிட்டன. சீனா இந்த அலையை இனி தடுக்க முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. இவருடைய அலறல் ஒரு புறம் கிடக்க லிபியாவில் நடைபெறும் போர் குறித்த சர்வதேச மாநாடு ஒன்றை பிரிட்டன் அடுத்த வாரம் நடாத்த இருக்கிறது. இரண்டாவது உலக யுத்தம் போல நிலமை கை மீறிப் போய்விட்டது.

0 கருத்துகள்: