காமெடியில் முன்னணி நடிகராக இருக்கும் வடிவேலு தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தும், திமுக ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மேலும் ஒரு காமெடி நடிகர்/பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவருகிறார்.
பட்டிமன்றங்களில் தனது நகைச்சுவை பேச்சால் மக்களை கவர்ந்த திண்டுக்கல்
ஐ.லியோனி, சில திரைப்படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்துள்ளார். இவர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’திமுகவுக்கு ஆதரவாக நான் 15 நாள் பிரச்சாரம் செய்யவிருக்கிறேன்.ஒரு நடிகர் நான் தான் அடுத்த முதல்வர் என்று கூறிவருகிறார். அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்வதுதான் என் குறிக்கோள். கலைஞர்தான் அடுத்த முதல்வர் என்று மக்களுக்கு புரியவைப்பேன்’’ என்று தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக