மார்ச் 30, மும்பை: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு உள்பட 6 பயங்கரவாத வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா சாமியார் பிரக்யாசிங் உடல்நிலை கோளாறு, மயக்கம் வருகிறது எனக் கூறுவதெல்லாம் வெறும் நடிப்புதான் என மருத்துவ அறிக்கை கூறுகிறது.
புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தும்போது மட்டுமே உடல் நிலை சரியில்லை என பயங்கரவாதி பிரக்யாசிங் புகார் கூறுகிறார். க்ராண்ட் மருத்துவக்
கல்லூரியில் மருந்துப்பிரிவு மருத்துவரான அல்கா தேஷ்பாண்டே தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் அளித்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
ஏதேனும் உடல்நிலை பிரச்சனையிருந்தால் ஏன் மருத்துவர்களை பரிசோதனைக்கு அனுமதிப்பதில்லை? என மருத்துவர் அல்கா தேஷ்பாண்டே கேள்வி எழுப்புகிறார். சாதாரண நாட்களில் வழக்கமாக பணிகளில் ஈடுபடும் அவர் பொதுவாகவே உற்சாகமாகத்தான் காணப்படுகிறார் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் சி.பி.ஐயும், என்.ஐ.ஏவும் நடத்திய விசாரணையில் பயங்கரவாதி பிரக்யாசிங் ஒத்துழைக்கவில்லை என புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். ஆம் அல்லது இல்லை போன்ற பதில்களைக் கூட அளிக்க பிரக்யா சிங் தயாரில்லை. விசாரணையின் போது அடிக்கடி மயக்கம் ஏற்படுவதாக கூறுவதுதான் அவருடைய வழக்கம் என புலனாய்வு அதிகாரி கூறுகிறார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக