தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.3.11

லிபியா:அட்ஜாபியா நகருக்குள் மறுபடியும் போராளிகள்


சென்ற வாரம் கேணல் கடாபியின் ஆதரவுப் படைகள் கைப்பற்றி முக்கிய எரிகொருள் குதங்கள் உள்ள நகரமான அட்ஜாபியா சற்று முன்னர் போராளிகள் தரப்பால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடாபியின் படைகள் வாகனங்களை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடுவதாக போரளி ஒருவர் அங்கிருந்து தெரிவிக்கிறார். தற்போது பீ.பீ.சி நிருபரும் அல் ஜஸீரா நிருபரும் அங்கு நிற்கிறார்கள். இந்த நகரம் போராளிகளின் கைகளில் விழுந்துவிட்டதென அவர்கள் ஊர்ஜிதம் செய்கிறார்கள். கடாபி நிலைகொண்டுள்ள திரிப்போலி நோக்கிப் போவதற்கு
முக்கியமாக கைப்பற்றப்பட வேண்டிய நகரம் இதுவாகும். சுமார் 20 வரையான கவச வாகனங்களும், பல ஆட்டிலறிகளும் தகர்க்கப்பட்டுக் கிடக்கின்றன. கடாபியின் படைகள் எங்காவது கட்டிடங்களுக்குள் மறைந்திருந்து சினைப்பர் தாக்குதலை நடாத்தலாம் என்று போராளி ஒருவர் தெரிவித்தார். இந்த வெற்றி போராளிகளின் நகர்வில் முக்கயமான அடி என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரை குழம்பிக் கிடந்த போராளிகள் இப்போதுதான் வெற்றியை நோக்கி நகர்கிறார்கள் என்று அங்குள்ள டேனிஸ் செய்தியாளர் கூறுகிறார். அதேவேளை இந்தப் போரில் தமது படைகள் வெற்றி பெற்றுள்ளன என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சற்று முன் கூறினார்

0 கருத்துகள்: