(அரசியல் செய்தியாளர்)
புலிகளால் வெளியேற்றப்பட்ட 622 முஸ்லிம் குடும்பங்கள் இதுவரை யாழ் மாவட்டத்திலுள்ள தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இவர்களுள் பெரும்பான்மை யானோர் யாழ் நகரப் பகுதியிலுள்ள சோனகத் தெரு, பொம்மை வெளி பிரதேசத்திலும் ஒரு சிலர் சாவகச்சேரியிலும் மீளக் குடி யேறியுள்ளார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
மீளக்குடியேறியுள்ள இவ் 622 முஸ்லிம் குடும்பங்களுக்கும் தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்க மீள்குடியேற்ற அமைச்சி டமிருந்து அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான உட னடிக் கொடுப்ப னவாகவே இத்தொகை வழங்கப்படவுள்ளது. எனினும், கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் இதுவரை வசித்து வந்த வெளிமாவட் டங்களிலுள்ள பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கில் மீள் குடியேறிவரும் மக்களுக்காக வழங்கப்படுகின்ற மீள்குடி யேற்ற உதவித் தொகையான 25000 ரூபா தமக்கு வழங்கப்பட வில்லை என இம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
போர் சூழல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடி யேறுகின்றபோது அவர்களுக் கென இத்தொகை அவ்வப் பிரதேச செயலாளர்களினால் வழங் கப்பட்டு வந்தது.
2008ம் ஆண்டுக்குப் பின்னர் இடம் பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே இத்தொகை வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சு திடீரென அறிவித்துள்ளது. இதனால், 1990ல் இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம் மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருக்கும் முஸ் லிம்கள் தமக்கு போதிய உதவிகளோ, உரிய ஏற்பாடுகளோ, வசதி களோ செய்துகொடுக்கப் படுவதில்லை என விசனம் தெரிவிக் கின்றனர். தமது பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல் கட்சிகளோ அரசாங்க அதிகாரிகளோ ஊடகங்களோ போதிய அக்கறை காட்டுவதில்லை எனவும், அண்மையில் பெய்த அடைமழை காரண மாக தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததாகவும் இம்மக்கள் அங்கலாய்க்கின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக