
கோபால்கஞ்ச், நவ.20- அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் ராமர் கோயில் கட்டுவதற்கு வழங்கும் வகையில் அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச பொதுச்செயலர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார். பிகார் மாநிலம் கோபால்கஞ்சில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொகாடியா கூறியதாவது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 90 x 115 அளவுள்ள இடத்தை மூன்றாக பிரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால், ராமர் கோயில் கட்ட 30 x 35 அளவுள்ள இடம் மட்டுமே கிடைக்கும். இந்த சிறிய இடம் ராமர் கோயில் கட்ட போதுமானதாக இருக்காது. சர்ச்சைக்குரிய இடம் தான் ராமர் பிறந்த இடம் என்னும் எங்கள் நிலையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுளளது. அங்கு ராமர் கோயில் கட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தரவேண்டும். அனைவரின் ஆதரவையும் வேண்டி நாடு தழுவிய "ஹனுமத் ஜகரன் ஹவன் யக்யா" என்னும் விழிப்புணர்வு பயணத்தை விஹெச்பி தொடங்கியுள்ளது. இவ்வாறு பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக