
பிரான்ஸை எச்சரித்து ஒஸாமா பின் லேடன் உரையாற்றிய ஒலிநாடாவை அல் ஜஸீரா வெளியிட்டுள்ளது. இதில் கடந்த மாதம் நைஜர் நாட்டில் ஐந்து பிரான்ஸ் நாட்டவரை கடத்திச் சென்றது பிரான்ஸ் முஸ்லிம்களுக்கெதிரான செயல்படுத்திவரும்அநீதிகளுக்கான எதிர்வினை என ஒஸாமா குறிப்பிட்டுள்ளார்.
எனது மக்கள் பசியால் வாடும்போது நீங்கள் எங்களது நிலங்களை மறைமுகமான பேரங்கள் மூலம் அபகரிப்பது எந்த விதத்தில் நியாயமானது என அந்த ஒலிநாடாவில் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக வட மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள முஸ்லிம் நாடுகளை குறிப்பிட்டு ஒஸாமா பேசியுள்ளார். முஸ்லிம் நாடுகளில் நீங்கள் நடத்தி வரும் அநீதிகளின் எதிர்வினைதான் நைஜரில் நடத்தப்பட்ட கடத்தல் சம்பவம் என ஒலி நாடாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பரில் நைஜரில் வேலை பார்த்து வந்த ஐந்து பிரான்ஸ் நாட்டவர் கடத்தப்பட்டதற்கு அல் காய்தாவின் வட ஆப்ரிக்கா பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இவர்களின் புகைப்படங்களையும் அல்காய்தா கடந்த மாதம் வெளியிட்டது. கடத்தல் சம்பவத்திற்கு பிறகு அல்காய்தா எந்த விதமான கோரிக்கைகளையும் தங்களுக்கு வைக்கவில்லை என பிரான்ஸ் அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒலிநாடாவில் பர்தாவை தடை செய்ய முன்வந்திருக்கும் பிரான்ஸின் செயலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒலிநாடாவில் பர்தாவை தடை செய்ய முன்வந்திருக்கும் பிரான்ஸின் செயலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் முஸ்லிம் பெண்களின் பர்தாவை நியாயமின்றி தடை செய்வது உங்களின் உரிமை என நினைக்கும்போது , எங்கள் நாடுகளை ஆக்கிரமித்துள்ள உங்களை வெளியேற்றுவது மற்றும் கொலை செய்வது எங்களின் உரிமை அல்லவா என தெரிவித்துள்ள ஒஸாமா ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு வெளியேறாவிட்டால் கடத்தல் சம்பவங்கள் தொடரும் என எச்சரித்துள்ளார். எங்களின் நிலைப்பாடு தெளிவானது - நீங்கள் கொன்றால் நாங்களும் கொல்வோம் , நீங்கள் மக்களை பிணைக்கைதிகளாக்கும்போது நாங்களும் அவ்வாறு செய்வோம் என அந்த ஒலிநாடாவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக