தேச ஒற்றுமைக்கு எதிராக பேசிய அருந்ததி ராயை நாடு கடத்த வேண்டும் என போபாலில் மத்தியபிரதேச பா.ஜ. தலைவர் பிரபாத்ஜா ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். விடுதலை ஒன்றே குறிக்கோள் என்ற தலைப்பில் கடந்த வாரம் டெல்லியில் காஷ்மீர் பிரிவினைவாதிகள், மாவோ ஆதரவாளர்கள் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பஙகேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராய், ‘காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை’ என்றார். மேலும் இந்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து அவரை தேச விரோத வழக்கில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அருந்ததிராய் சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர் என்பதால் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும் சமயத்தில் புதிதாக ஒரு சர்வதேச பிரச்னையை உருவாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் அருந்ததிராயை நாடு கடத்த வேண்டும் என மத்தியபிரதேச பாஜ மாநில தலைவர் பிரபாத் ஜா, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது கடிதத்தில், ‘அருந்ததிராயை நாடு கடத்தவதுடன் அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் கவுரவங்களை வாபஸ் பெற வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேச விரோத பேச்சுக்கும், பேச்சு சுதந்திரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை ப.சிதம்பரம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் பிரபாத் ஜா குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக