தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.9.11

முஸ்லிம்களுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு: மத்திய சட்ட மந்திரி தகவல்


முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக மாதிரி திட்டம் வகுக்கப்படும் என்று, மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்சித் கூறியுள்ளார்.
மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்சித் ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திர அரசு பாணியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டுக்காக மாதிரி திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் எனது அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாரத்புர்:குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய காவல்துறை


9
புதுடெல்லி:ராஜஸ்தான் பாரத்புரில் உள்ள கோபால்கர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் கலவரம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் காவல்துறையையோ அல்லது மற்ற அரசு துறைகளையோ நம்ப முடியாமல் பீதியில் உள்ளனர்.
முஸ்லிம்களுக்கும்

கூகுள் இணையதங்களை பாகிஸ்தானில் தடை செய்வோம்: ரகுமான் மாலிக்

கராச்சி, செப். 20  தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கூகுள் மற்றும் யூடியூப் இணையதளங்களை பாகிஸ்தானில் தடை செய்வோம் என்று உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் அவ்வப்போது சில கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்கி வருகிறார்

குஜராத்தில் உள்ள 5 கோடி மக்களுக்கு நீதி செலுத்த முடியாதவர் எவ்வாறு இந்திய நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கு நீதி செலுத்துவார்


மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நரேந்திர மோடியின் செயல்பாட்டை பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்து உள்ளது.
நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தள தேசிய செய்தித் தொடர்பாளர் சிவானந்த் திவாரி, ''குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

அமெரிக்க சொர்க்கத்தில் ஆறில் ஒருவர் ஏழை!

தற்போது சோமாலியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி இருக்கம் மக்களுக்காக மேற்குலக ஊடகங்கள் மக்களிடம் காணிக்கை போடுமாறு கேட்டு வருகின்றன. இனி அந்த கோரிக்கை அமெரிக்க மக்களுக்காகவும் இருக்குமோ?
ஹாலிவுட் படங்களில் டெக்னாலாஜியை வைத்து மிரட்டுவதாக இருக்கட்டும், பின்லேடனை பறந்து போய் கொன்ற ஆக்சன் த்ரில்லராக இருக்கட்டும், மென்பொருள் துறையில் ஆதிக்கம் செய்வதாக இருக்கட்டும், உலகெங்கும் கடன் வாங்கி தின்று தீர்ப்பதாக இருக்கட்டும்…. எல்லாவற்றிலும் விண்ணைத் தொடும் அமெரிக்காவில்தான் ஏழைகள் அதிகமாம்!

யேமன் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் : துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலி?


யேமன் அதிபர் அலி அப்துல்லா சாலா பதவி விலக கோரியே நேற்று இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் மூலம் ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்ட போதும் அதிபர் பதவி விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என கிளர்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.பாதுகாப்பு படையினர் மீது ஆர்ப்பாட்ட

19.9.11

பயங்கரவாதி மத்தியில் மிதவாதியின் கடிதம்


நரேந்திர மோடி என்கிற மனிதகுல விரோதி, மனிதாபிமானம் இல்லாத மிருகம் 2002-ம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் ஹிந்து பயங்கரவாதிகளால் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அச்சமயம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினரின் ஆட்சி மத்தியில் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஒரே ஒரு மிதவாத தலைவர் திரு. வாஜ்பாய் ஆவார். சுருங்கச்சொன்னால் தீவிரவாதிகளுக்கு மத்தியில் ஒரு மிதவாதி. குஜராத்தில்

அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி இன்று காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்


r
ஸ்ரீநகர்:தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று கோரி இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் சுயேச்சை உறுப்பினராக உள்ள ரஷீத் ஷேக் என்பவர் அப்சல் குருவின் தண்டனையைக் குறைக்க

இந்திய - நேபாள எல்லை பகுதியில் நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்


நேபாள் - இந்திய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் பிரதேசத்தில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 6.8 ரிக்டர் அளவில் இப்பூகம் தாக்கியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அங்குள்ள

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆல் இந்தியா மில்லி குழுவுக்கு மம்தா உத்திரவாதம்


14sanat9
கொல்கத்தா:முஸ்லிம்களின் பிரச்சினைகளை சரி செய்யக் கோரி, கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி  மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஆல் இந்தியா மில்லி கவுன்சிலை சேர்ந்த குழு தலைவர்கள் சந்தித்தனர்.
மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றப் பின் முதல் முறையாக முஸ்லிம்கள் அடங்கிய குழுவை சந்திக்கிறார், மேலும் அவர்கள் வைத்த முக்கிய கோரிக்கைகள் கல்வி, இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்பு பற்றியாகும்.

மோடியின் உண்ணாவிரதம் ஒருபோதும் குற்றத்தை மறைத்து விடாது


குஜராத்தில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கியுள்ள நரேந்திர மோடியின் நடவடிக்கை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.


மோடியின் உண்ணாவிரதம் அவர் செய்த குற்றங்களைக் குறைத்து விடாது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி சனிக்கிழமை தெரிவித்தார்.


மோடி உண்ணாவிரதத்தின் தேவையை உணர்ந்துள்ளார். இது குஜராத்தில்

கலவர வழக்கை சீர்குலைக்க எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் மோடி-பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்


அகமதாபாத்: 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் நடந்த பெரும் கலவரம் தொடர்பாக நான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நலன் வழக்கை சீர்குலைக்க, எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் முதல்வர் நரேந்திர மோடி என்று பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த பெரும் கலவரத்திற்குப் பின்னர் அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார் சாராபாய். அதில் குஜராத் கலவரத்தைத் தடுக்க மாநில அரசும், முதல்வர் நரேந்திர

நம்முள்ளே இத்தனை அழகா..?



நம் உள்ளே  இத்தனை அழகா..? எண்ணி வியந்து போகும் அற்புத அழகு.
மனித உடம்பின் உள்ளுறுப்புக்களின் துல்லிய படங்கள் இவை. அதி துல்லிய உருப்பெருக்கு காட்டியின் துணைகொண்டு பிடிக்கப்பட்ட படங்கள்.  மேலேயுள்ளது மனிதமுட்டையின் குறுக்குச் செல்கள். இனி..

18.9.11

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி! முஸ்லிம் லீக்


உள்ளாட்சி தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.
இது குறித்து கூட்டணிக் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் செய்தியாளர்களிடம் பேசும்போது தோழமைக் கட்சிகளுடன் ஆலோசிக்காமலேயே உள்ளாட்சித் தேர்தலி்ல் திமுக தனித்துப் போட்டியிடும் என்ற முடிவை அக்கட்சியின் தலைவர்

குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!

திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம்

நண்பர்களே,
திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின்

மோடிக்கு ஆதரவா?- நேரடியாக பதிலளிக்க ஜெ மறுப்பு பேட்டி


வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: நரேந்திர மோடி உண்ணாவிரதத்தை ஏன் அதிமுக அளிக்கிறது?
பதில்: நரேந்திர மோடி சமூக

‘ஆயுர்வேத மசாஜ்’ என்ற பெயரில் சென்னையில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்.


ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழிலில் இளம் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயுர்வேத மசாஜ், பியூட்டி பார்லர் சென்டர் மற்றும் அழகு கலை நிபுணர் என்ற பெயரில், சென்னையில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு புகார்கள் வந்தன. 

ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து

அமுக்கறான் கிழங்கு 700 கிராம், நிலபனை கிழங்கு 700 கிராம், சுக்கு 70 கிராம், மிளகு 70 கிராம், திப்பிலி 70 கிராம், சித்திர மூலம் 70 கிராம், ஏலம் 35 கிராம், கிராம்பு 35 கிராம், சிறுனாகபூ 35 கிராம், ஜாதிக்காய் 35 கிராம், லவங்க பத்திரி 35 கிராம், சவ்வியம் 72 கிராம், பேரிச்சம் காய் (விதை நீக்கியது) 525 , ஆகியவைகளை நாட்டு மருந்து கடையில் வங்கி நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஓன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து நன்றாக பாகு பதம் வரும்வரை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் இந்த பொடிகளை போட்டு

17.9.11

ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 
ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு. 

இத்திட்டத்தின் முதல் கட்டமாக,

நரேந்திர மோடி உண்ணாவிரதம்: அவாலுக்கு இவா (ஜெயலலிதா )ஆதரவு.


3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் இந்த உண்ணாவிரதத்தில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகிய எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர்.
அமைதி, மத நல்லிணக்கத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும்.