தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.7.11

வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?


கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 6

”சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களுக்கும், தூக்குக் கயிற்றில்தொங்கிய தியாகிகளுக்கும் உயிர் கொடுத்த மந்திரச் சொல் ‘வந்தே மாதரம்‘.தன்னிகரில்லா பாரதத் தாயின் மீது பக்தியையும், அன்பையும் தூண்டிஎழுச்சியைத் தோற்றுவிக்கும் ‘வந்தே மாதர‘ தேசிய கீதத்தை கிறித்தவர்களும்,முசுலீம்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?”
- ஆர்.எஸ்.எஸ்.இன் நீண்டகால அவதூறுகளில் இதுவும் ஒன்று.
கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாகப் பாடும் நடைமுறையை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள்.

277 தலித்துகளை படுகொலை செய்த பயங்கரவாதிக்கு விடுதலை!

277 தலித்துகளை கூட்டுப்படுகொலை செய்த ரன்வீர் சேனா என்ற உயர்ஜாதி பயங்கரவாத அமைப்பின் தலைவன் பிரம்மேஷ்வர் சிங் என்ற முக்கியாஜிக்கு ஜஹனாபாத் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

60 வயதான சிங்கின் மீது கூட்டுப்படு கொலைக்கு தலைமை வகித்தது உள்பட 22 க்ரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதில் 6 வழக்குகள்முக்கியமானவை,

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரயில் தடம் புரண்டது: 20 பேர் பலி, 100 பேர் படுகாயம்

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற கல்கா எக்பிரஸ் இன்று 12.30 மணி அளவில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மற்றும் பத்தேஹ்பூர் மால்வா ரயில் நிலையங்களுக்கு இடையே திடீரென தடம் புரண்டது. ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
 
110 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது எமர்ஜென்சி பிரேக்கை திடீரென்று

பாகிஸ்தானுக்கு நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தி உள்ளது. இதனை வெள்ளை மாளிகளைத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வந்த அமெரிக்க வீரர்களை, பாகிஸ்தானை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு நியூயார்க்

நெல்லையில் வெடிபொருட்கள் பறிமுதல்! ஹிந்துத்துவா சதியா?

அச்சன்புதூர்: தென்காசி அருகேயுள்ள அச்சன் புதூரில் காசிதர்மம் குளத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவ்வழியே சென்ற வாலிபரிடம் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், தென்காசி டி.எஸ்.பி. சீனிவாசன் ஆலோசனையின்படி அச்சன்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள்

அரசு பள்ளியிலும் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' !!!

 ஸ்ரீவில்லிபுத்தூர்: தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், கிராம மாணவர் களுக்கு அரசு பள்ளியிலும் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெருகி வரும் ஆங்கில மோகத்தால், கிராமப் புறங்களில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை நகர்புற ஆங்கில பள்ளிகளில் சேர்க்கின்றனர். 
இதனால், பெரும்பாலான கிராமங்களில்

11.7.11

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுப்போம்

BRIG GEN amir-ali
டெஹ்ரான்:ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க விமானங்கள் மீது கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என ஈரானின் புரட்சி படையின் மூத்த தலைவர் ஆமிர் அலிஹாஜி ஸாதஹ் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சட்டங்களை புறக்கணித்து ஈரான் அணு ஆயுதங்களை சோதனை நடத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து அவர் இந்த எச்சரிக்கையை ஆமிர் அலி ஹாஜி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சிறுவனை கொன்ற ராணுவ அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்!

ஜூலை 11, சிறுவன் தில்ஷானை சுட்டுக் கொன்றதாக கைதான ராணுவ அதிகாரி ராமராஜ் பாண்டியன் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:எனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள எழுமலை. 

40 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் ஆயுதங்களை பராமரிக்கும் பிரிவில் ஹவில்தாரராக பணிபுரிந்தேன். பட்டப்படிப்பை முடித்துள்ள நான் லெப்டினன்ட் கர்னலாக இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பணி ஓய்வு பெற்றேன்.

இனி ஆண்டுக்கு 4 சிலிண்டருக்கு மேல் வாங்கினால், கேஸ் விலை ரூ.800!!

சென்னை: ஆண்டுக்கு 4 சமையல் கேஸ் சிலிண்டருக்கு மேல் வாங்குவோர், ஒவ்வொரு கூடுதல் சிலிண்டருக்கும் இனி ரூ.800 விலை தர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.393.50 எனவும் மற்ற மாநிலங்களில் தூரத்தைப் பொறுத்து சராசரியாக ரூ.400 எனவும் விற்கப்படுகிறது. இந்த கேஸ் சிலிண்டர்களை 3 வாரங்களுக்கு ஒரு முறை வாங்கிக் கொள்ளலாம்.

கூகிளுடன் இந்திய அரசு மோதல்


கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலையில், இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில், இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகிள் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் ஒரு நயாகரா நீர்வீழ்ச்சி


இந்தியாவில் இருக்கும் இந்த நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? சில மலையாளிகளை தவிர வேறு எவருக்கும் பெரிதாக தெரிந்திருக்காது.
கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் திரிச்சூரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கும் இந்நீர்வீழ்ச்சி செம்டெம்பருக்கு பின்னரான காலப்பகுதியில் இன்னமும் வேகமாக பாயும்.
எப்போது இங்கு சென்று வரப்போகிறீர்கள்?


லஞ்சமா? 9840983832 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்

லஞ்சம் வாங்கும் போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், 9840983832 என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல் தெரிவிக்கும் திட்டம் சென்னை போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
 
இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் டி.ஜி.பி.க்கும் வேண்டுகோள்

10.7.11

தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ லெப்டினன்ட் கர்னல் கைது!

JULAY 10, சென்னை:  சென்னை ராணுவ குடியிருப்பில், சிறுவன் தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கைது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம். 

சிறுவனை சுட்டுக்கொன்றவர்

இஸ்லாமிய ஆடையுடன் பழுதூக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள அமெரிக்காவில் தடை


muslim weight lift women
வாஷிங்டன்:பழுதூக்கும் போட்டியில் இஸ்லாமிய ஆடையுடன் கலந்து கொள்ள அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ, 53 கிலோ பிரிவுகளில் சிறந்து விளங்கிய குல்ஸும் அப்துல்லாஹ்வுக்கு அடுத்து வரவருக்கும் தேசிய போட்டிகளில் பங்கேற்க அமெரிக்க வைட்லிஃப்டிக் அசோசியேசன் தடை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சியில் கண்டவுடன் சுட உத்தரவு-60 பேர் பலி

pakistan riots
கராச்சி:பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் தொடரும் அரசியல் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 90-ஐ தாண்டியுள்ளது. கலவரம் தொடரும் நகரத்தில் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாண அரசு வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உரங்கியில்

பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை!

இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு நாயகன் பாபாராம்தேவ். காவியுடையில் காட்சி தரும் "யோகா மாஸ்டர்' பாபாராம்தேவ். இவரை பற்றி சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள். பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று வடமாநிலங்களில் இயக்கம் நடத்தியவர். 

இப்போது, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோரையும் தூக்கில் போட வேண்டும் என்கிறார்.  காவி உடை தரிக்கும் இவரின் சொத்து மதிப்பு 5,000 கோடி ரூபாய் என்றும், ஆண்டு வருமானம் 1,000

தாக்குதலில் காயமடைந்த ஏமன் அதிபர் தொலைக்காட்சியில் உரை

ரியாத், ஜூலை. 8-     குண்டுவீச்சு தாக்குதலில் காயமடைந்த ஏமன் நாட்டின் அதிபர் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தொலைக்காட்சி வாயிலாக தோன்றி உரையாற்றினார்.
ஏமன் அதிபர் அலிஅப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த

இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக குஜராத் அரசு


gujarat child victim
அஹ்மதாபாத்:2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆவணங்கள், இண்டலிஜன்ஸ் லாக் புக்குகளும் அழிக்கப்பட்டுவிட்டதாக நானாவதி கமிஷன் முன்னால் ஆஜரான அரசு வழக்கறிஞர் சரத் வக்கீல் தெரிவித்துள்ளார். மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிடம்

சுனில் ஜோஷி கொலைவழக்கு:என்.ஐ.ஏ நீதிமன்றத்தை அணுகும்

sunil joshi
போபால்:ஆர்.எஸ்.எஸ் ஹிந்துபயங்கரவாத இயக்கத்தை சார்ந்த சுனில் ஜோஷி கொல்லப்பட்ட வழக்கின் விசாரணைப் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கோரி தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மத்திய பிரதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இவ்வழக்கு தேவாஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மலேகான்,