தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.10

அயோத்தியில் மாநாடு நடத்த விஹெச்பி முடிவு

அயோத்தி, நவ.8- வரும் 19-ம் தேதி அயோத்தியில் மாநாடு ஒன்றை நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இத்தகவலை அந்த அமைப்பின் தலைவர் ராம் மங்கள் தாஸ் ராமாயணி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அயோத்தியில் நடைபெறும் மாநாட்டில் சுமார் 60 ஆயிரம் ராம பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

"இந்து மதத் தலைவர்களும் துறவிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறி அறக்கட்டளை ஒன்றின் மூலம் பாபர் மசூதியை கட்ட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணியை ராகுல் மூலம் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்றும் ராம் மங்கள் தாஸ் தெரிவித்தார்.

தில்லியில் ஒபாமா: மன்மோகன் சிங் வரவேற்பு


புது தில்லி, நவ. 7: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் புது தில்லி வந்து சேர்ந்தார்.
புது தில்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபைப் புறக்கணித்து பிரதமர் மன்மோகன் சிங், புது தில்லி விமான நிலையத்தில் ஒபாமாவை நேரில் வரவேற்றார்.
மன்மோகன் சிங்குடன் வரவேற்பில் பங்கேற்ற அவரது மனைவி குருசரண் கெளருடனும் ஒபாமாவும், மிஷேலும் உரையாடினர்.
மத்திய இணை அமைச்சர் சல்மான் குர்ஷீத், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர், வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரும் ஒபாமா தம்பதியை வரவேற்றனர்.
ஹுமாயூன் சமாதியில் ஒபாமா: விமான நிலையத்தில் இருந்து ஒபாமா தம்பதி நேரடியாக தில்லியில் உள்ள சுமார் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹுமாயூன் சமாதியைப் பார்வையிடுவதற்காக சென்றனர்.
அவர்களுக்கு அதன் வரலாற்றுப் பின்னணி குறித்து இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை கண்காணிப்பு ஆய்வாளர் கே.கே.முகம்மது எடுத்துக் கூறினார்.
உள்ளே நுழைவதற்கு முன்னரே அந்த நினைவுச் சின்னத்தைப் பார்த்து ஒபாமா கூறிய வார்த்தை- "அற்புதம்'.
பெர்சியன், மத்திய ஆசிய, இந்திய கட்டடக் கலையின் சங்கமமாக விளங்கும் ஹுமாயூன் சமாதியை இருவரும் சுமார் 45 நிமிடம் பார்வையிட்டனர்.
தாஜ் மஹால் கட்டுவதற்கு இந்த நினைவுச் சின்னம்தான் உந்துதலாக இருந்தது என ஒபாமாவிடம் முகம்மது குறிப்பிட்டார்.
அங்கு பணிகள் மேற்கொள்ளும் தொழிலாளிகளின் குழந்தைகள் 14 பேருடன் ஒபாமா தம்பதியினர் பேசி மகிழ்ந்தனர். அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.
'இந்த நினைவுச் சின்னம் மிகவும் அற்புதமாக உள்ளது. எங்கள் நாட்டில் 7 ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு சின்னம் கட்டப்பட முடியுமா என்பது சந்தேகமே' என ஒபாமா குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு புகழாரம்: "அரசுகளின் எழுச்சி, வீழ்ச்சிக்கு இடையே, இந்தியப் பண்பாடு தாக்குப் பிடித்ததுடன் மட்டும் இல்லாமல் உலகையே சாதனையின் உச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது' என ஹுமாயூன் சமாதியில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் ஒபாமா எழுதினார்.
இரு தலைவர்கள் பேச்சு: ஹுமாயூன் சமாதியைப் பார்வையிட்ட பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் இரு தலைவர்களும் 25 நிமிடம் தனிப்பட்ட முறையில் பேசினர்.
மன்மோகன் சிங் விருந்து: அதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் அளித்த விருந்தில் ஒபாமா தம்பதியினர் பங்கேற்றனர்.
இன்று...: திங்கள்கிழமை காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒபாமாவுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் பின்னர் மகாத்மா காந்தியின் சமாதியில் ஒபாமா தம்பதியினர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்தப் பேச்சுக்குப் பின்னர் ஒபாமாவும், மன்மோகன் சிங்கும் கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஒபாமாவை மதியம் சந்திக்க உள்ளனர்.
மாலையில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா உரையாற்றுகிறார்.
2000-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவருக்குப் பின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ள 2-வது அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஒபாமாவுக்கு வரவேற்பு அளிக்க உள்ளார்.
அத்துடன் தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொள்ளும் ஒபாமா, செவ்வாய்க்கிழமை காலை இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.




உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 12 லட்சம் பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்


மதுரை : ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 12 லட்சம்  பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

7.11.10

குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது

இந்து மத வலதுசாரி பயங்கரவாதிகள் மூவர் நேற்று தீபாவளி தினத்தன்று  இரவு புனித நூல்களான குர்ஆன், பைபிள் ஆகியவற்றை பகிரங்கமாக எரித்து சாம்பலாக்க திட்டமிட்டு அறிவித்திருந்தனர். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

புனித நூல்களை எரிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இம்மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தினர்.

இம்மூவரில் பிரதானக் குற்றவாளியான  நாற்பத்திரண்டு வயதான டேட்டுஸ் பனகல் லியோ  என்பவர்  இனங் காணப்பட்டுள்ளார்.இவர்   கடந்த எட்டு வருடங்களாக சுவிட்ச்சர்லாந்தில் வசித்து வருகின்றார். நீதி மன்றத்தில் இவர் வாதிடுகையில்  குர்ஆன், பைபிள் இரண்டும் தீய சக்தியான சாத்தானின்  இரு கண்கள் மாதிரி, இந்நூல்களை குழந்தைகள் படிப்பதை தாம் விரும்பவில்லை  என்று கூறி இருக்கின்றார்.

மத மோதல்களுக்கு இடங் கொடாத சுவிஸ்சில் இவர்கள் குற்றவாளி என்று அறியப்பட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மரபுகளை உடைத்து ஒபாமாவை விமான நிலையத்தில் வரவேற்ற மன்மோகன்

டெல்லி: இரண்டு நாள் மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று பிற்பகலில் டெல்லி வந்தார்.

மரபுகளை எல்லாம் உடைந்தெறிந்துவிட்டு அவரை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி பாலம் விமான நிலையத்தில் நேரில் வந்து வரவேற்றார்.

நேற்று முன் தினம் மும்பை வந்த ஒபாமா அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, இன்று தனது மனைவி மிஷேல் மற்றும் குழந்தைகளுடன் டெல்லி வந்தார்.

அவரை பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவி குருசரன் சி்ங்குயுடன் வந்து விமான நிலையத்தில் வரவேற்றார். வழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்களை விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பது இல்லை.

ஆனால், ஒபாமாவுக்காக அந்த மரபை உடைத்துவிட்டு வந்தார் பிரதமர்.

இன்றிரவு தனது இல்லத்தி்ல ஒபாமா குடும்பத்தினருக்கு விருந்தளிக்கிறார் மன்மோகன் சிங்

இஸ்லாத்தின் கோட்பாடுகளை விட்டு விலகிச் சென்றுவிட்ட தீவிரவாதிகள்-ஒபாமா

மும்பை: ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

மும்பையில் புனித சேவியர் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இன்று ஒபாமா உரையாற்றினார். பின்னர் மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இந்தியா வளர்ந்து வரும் தேசம் என்கிறார்கள். இதை நான் மறுக்கிறேன். இந்தியா ஒரு வளர்ந்து விட்ட தேசம் தான். உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளை அதிசயிக்க வைத்துள்ளது. வறுமையையும் தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் தகுதியும் பலமும் இந்தியாவிடம் உள்ளது.

இந்திய-அமெரிக்க உறவு என்பது இந்த நேரத்தில் மிக மிக அவசியமானது. உலகின் பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒத்த கருத்து நிலவுகிறது என்றார்.

பின்னர் ஜிகாத் குறித்து ஒரு மாணவர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்பதே உண்மை. அவர்களை ஒடுக்குவது நம் முன் உள்ள பெரிய சவால்.

அனைவருமே உலகின் எல்லா மதங்களையும் மதித்து நடக்க வேண்டும். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அமைதியையும் நியாயத்தையும் நேர்மையையும் விரும்புபவர்கள். அவர்கள் அதீத சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தான் என்றார்.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு குறித்து நேற்று எந்தக் கருத்தையும் தெரிவிக்காத ஒபாமாவிடம், ஒரு மாணவி கேள்வி எழுப்புகையில், தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டதை சுட்டிக் காட்டினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஒபாமா,

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் எவ்வளவு வேகம் காட்ட வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அந்த வேகம் பாகிஸ்தானிடம் இல்லை. தீவிரவத்தை பாகிஸ்தான் இன்னும் வேகம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து இரு நாடுகளும் அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்க்க வேண்டும். இரு நாடுகளுமே இணைந்து வளர்ச்சி பெற முடியும். இதில் அமெரிக்காவுக்கும் உதவ முடியும். ஆனால், எங்களது கருத்தை எந்த நாடு மீதும் திணிக்க மாட்டோம்.

ஆப்கானி்ஸ்தானிலும் அமைதியைத் திரும்பச் செய்து அந்த தேசத்தை ஸ்திரமுள்ளதாக்குவதும் சாத்தியம் தான் என்றார்.

முன்னதாக மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஒபாமா தயாரானபோது மைக்கைப் பிடித்த அவரது மனைவி மிஷேல், குழந்தைகளே, ஒபாமாவிடம் மிகக் கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என்றார்

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமா

மும்பை: தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

மும்பை வந்துள்ள பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷேலும் தாஜ் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த மும்பை தாக்குதல் நினைவு புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலு்த்தும் நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, நான் மும்பைக்கு வந்ததற்கும், தாஜ் ஹோட்டலில் தங்குவதற்கும் காரணம் இருக்கிறது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஹோட்டலும் ஒன்று. அந்தத் தாக்குதலை நாம் என்றும் மறக்க முடியாது.

ஆனால், அந்தத் தாக்குதலை இந்திய மக்கள் மிகுந்த மன பலத்துடன் எதிர்கொண்டனர். அந்தக் கொலையாளிகளிடம் மக்கள் பணிந்துவிடவில்லை.

அந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளிலேயே மும்பை நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தாக்குதலால் முடங்கிவிடாமல் ஸ்கூட்டர்களிலும் ரயில்களிலும் பணிக்குச் செல்வோர் தங்கள் பணிகளை உடனே தொடங்கினர். தாஜ் ஹோட்டலும் அடுத்த ஒரே மாதத்தில் மீண்டும் விருந்தினர்களை அனுமதிக்க ஆரம்பித்தது.

ஹோட்டல் முடங்கிவிடாமல் மீண்டும் எழுச்சி கொண்டு நின்றது. அதே போல மும்பையும் இந்த மாபெரும் தேசமும் தனது இயல்பு வாழ்க்கைக்கு உடனே திரும்பின. அது இந்திய மக்களின் பலத்தை வெளிக்காட்டியது.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். மும்பை போன்ற மற்‌‌றொரு தாக்குதல் நடந்துவிடாமல் தடுக்க இரு நாடுகளும் தேவையான உளவு ரகசியங்களை பகிர்ந்து வருகிறோம் என்றார்.

மகா. முதல்வரிடம் வருத்தம் தெரிவித்த யுஎஸ் தூதரகம்:

ஒபாமாவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் மிக அதிகமாக உள்ளன.

ஒபாமாவை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மகாராஷ்ட்டிர முதல்வர் அசோக் சவாணுக்கும் துணை முதல்வர் சகன் புஜ்பால், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோருக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அவர்களுக்கு பாஸ் வழங்க, அவர்களது அட்ரஸ் புரூப், அடையாள அட்டை நகல், போட்டோ, பேன்கார்டு எண், பாஸ்போர்ட் எண் எல்லாம் கோரப்பட்டது. மேலும் இவர்களுக்கு முறைப்படியான அழைப்பும் நேற்று மாலை வரை வரவில்லை.

இதையடுத்து ஒபாமா பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து நேற்றிரவு அமெரிக்கத் தூதரம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் நேற்றிரவில் அமெரிக்கத் தூதரகம் அழைப்பிதழ்களையும் தந்தது.

இதைத் தொடர்ந்து இன்று ஒபாமாவை, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் மகாராஷ்டிராவின் வரலாறு, பண்பாடு அடங்கிய புததகத்தை நினைவுப் பரிசாக வழங்கி வரவேற்றார். ஆனால் உள்துறை அமைச்சர் பாட்டில் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டார்.

ஒபாமா முதல் முறையாக இந்தியா வருகை:

டெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக இன்று மும்பை வந்தார்.

முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு, மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் அருகே உள்ள கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு, வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் தனது மனைவி மிஷெல், இரு மகள்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் இந்தியா புறப்பட்டார் ஒபாமா.

வழியில் ஜெர்மனியில் அவரது விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

இன்று பகல் 1 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஒபாமாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொலபா கடற்படைத் தளத்துக்குச் சென்ற ஒபாமா அங்கிருந்து காரில் தாஜ் ஹோட்டல் சென்றார்.

அவரது வருகையையொட்டி மும்பையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் இரண்டு நாட்கள் ஒபாமா தங்கியிருப்பதால் சத்ரபதி சிவாஜி மார்க், ஆதம் தெரு, பூஷன் மார்க், ராம்சந்தானி மார்க், நவரோஜி பர்துன்ஜி ரோடு, பெஸ்ட் மார்க் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதலில் காயமடைந்தோருடன் சந்திப்பு:

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது தாஜ் ஹோட்டலில் காயமடைந்தவர்களை ஒபாமா சந்தித்தார்.

காஷ்மீரிலும் பலத்த பாதுகாப்பு:

அமெரிக்க அதிபரின் வருகையி்ன்போது காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் அதிகரிக்கலாம் என்பதால் அங்கும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவால் அமெரிக்காவில் 60,000 புதிய வேலைகள்:

இந்தப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையிலும், அணு சக்தி்த் துறையிலும் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது.

மேலும் அந் நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவுள்ளன.

இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் அவுட்சோர்சிங் விவகாரத்தில் இந்தியாவுக்கு பணிகளை ஏற்றுமதி செய்வதை ஒபாமா கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சனையை ஒபாமாவிடம் கிளப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்துக்கு இந்தப் பயணத்தின்போது தீர்வு ஏதும் கிடைப்பது சந்தேகமே.
  Read:  In English 
அமெரிக்காவில் செனட் சபைக்கு நடந்த இடைத் தேர்தலில் ஒபாமாவுக்கு பலத்த அடி விழுந்து, எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரத் தேக்கமும் வேலைவாய்ப்பின்மையுமே முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் அவுட்சோர்சிங் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒபாமா சலுகை ஏதும் காட்ட வாய்ப்பில்லை.

ஒபாமாவுடன் உயர்மட்ட பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பேர் பல விமானங்களில் வந்துள்ளனர்.

5.11.10

ஈராக் மீதான போர்: ஜார்ஜ் புஷ் வருத்தம்

வாஷிங்டன்: ஈராக் மீது போர் தொடுத்தது தவறு என்று அமெரிக்க முன்னாள் அதிகபர் ஜார்ஜ் புஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். புஷ், டெசிஷன் பாய்ண்ட்ஸ் என்ற பெயரில் தன்னுடைய சுயசரிததைய புத்தகமாக எழுதி இருக்கிறார். இப்புத்தகம் அடுத்தவாரம் வெளிவர உள்ளது. இதில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் ஈராக் மீதான போர் குறித்தும் எழுதியுள்ளார். அந்நாட்டின் மீது போர் தொடுத்தது, நான் செய்த தவறு என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடு வானில் வெடித்த விமான என்ஜின்-சிங்கப்பூரில் தரையிறங்கிய ஆஸி. விமானம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலியாவி்ன் குவாண்டாஸ் நிறுவனத்தின் ஏ-380 ரக ஏர்பஸ் சூப்பர் ஜம்போ விமானத்தின் என்ஜின் நடு வானில் வெடித்துச் சிதறியது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் சிங்கப்பூர் [^] விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.​

இதைத் தொடர்ந்து அனைத்து ஏ-380 ரக ஏர்பஸ் விமானங்களையும் ஆஸ்திரேலியா தரையிறக்கிவிட்டது.

நேற்று சிட்னிக்கு புறப்பட்ட இந்த இரட்டை அடுக்கு விமானத்தில் 4 என்ஜின்கள் உள்ளன.​ அதில் 433 பயணிகளும் 26 விமானப் பணியாளர்களும் பயணித்தனர்.

கிளம்பிய 6வது நிமிடத்தல் இந்த விமானம் ஒரு தீவின் மீது பறந்து கொண்டிருந்த போது இடது பக்கத்தில் உள்ள ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த என்ஜின் வெடித்தது. இதையடுத்து பைலட் உடனடியாக விமானத்தை தரையிறக்க மீண்டும் சிங்கப்பூருக்கு திருப்பினார்.​

அந்த விமானம் பத்திரமாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.​ ஒரு என்ஜின் முழுவதும் கருகிவிட்டது. அது வெடித்துச் சிதறியதில் அதன் பல பாகங்களைக் காணவில்லை.

இதற்கிடையே அந்த விமானம் பறந்து சென்ற இந்தோனேசியாவின் பாதம் தீவுப் பகுதியில் வசிக்கும் மக்கள்,​​ விமானம் பறந்தபோது மிகப் பெரிய வெடிச் சத்தம் கேட்டதாகக் கூறியுள்ளனர். பாதம் தீவு சிங்கப்பூருக்கு அருகில் உள்ள இந்தோனேசிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

பாதம் தீவில் குடியிருப்பு பகுதிகளிலும் வணிக வளாகங்களிலும் என்ஜின் பாகங்கள் விழுந்துள்ளன.​

இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, அந்த அறிக்கை வரும் வரை அனைத்து ஏ-380 ரக விமானங்களையும் பயன்பாட்டில் இருந்து தாற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
  Read:  In English 
சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு செந்தமான ஏ-380 ரக விமானம் கடந்த 2007ம் ஆண்டும், ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ-380 ரக விமானம் சென்ற ஆண்டும் நடு வானில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு தரையிறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன என்ஜின்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

4.11.10

ஈராக் கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குவோம்: அல்கொய்தா மிரட்டல்

பாக்தாத், நவ. 4-
ஈராக் தலைநகரம் பாக்தாத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் தீவிரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ஆலயத்துக்கு வந்திருந்தவர்களை அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர். அமெரிக்க ராணுவம் மற்றும் ஈராக் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 58 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளும் உயிர் இழந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து அல்கொய்தா தீவிரவாதிகள் இணைய தளம் மூலம் ஒரு மிரட்டல் விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஈராக்கில் எகிப்தைச் சேர்ந்த காப்ட் கிறிஸ்தவ சபை முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மாற்றி வருகிறது. குறிப்பாக பெண்களை கிறிஸ்தவர்களாக மாற்றி வருகிறார்கள். இதற்காகவே தாக்குதல் நடத்தினோம்.
முஸ்லிம்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதை நிறுத்த வேண்டும். மேலும் கிறிஸ்தவர்களாக மாற்றி தங்கள் பிடியில் வைத்துள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும்.
இல்லை என்றால் ஈராக்கில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் அவர்களது அமைப்பு கள் மீது இது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். அவர்கள் எங்கு பயணம் செய்தாலும் அங்கும் தாக்குதல் நடத்துவோம். அவர்கள் ரத்த ஆறுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3.11.10

துபாயில் அதிக சொத்து முதலீடு செய்வதில் இந்தியர்கள் முதலிடம்

உலக பொருளாதார நெருக்கடியில் பின்தங்கிய துபாய், இந்தியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதுவரை ஐரோப்பியர் ஆதிக்கம் செய்து வந்த நிலை மாறி அங்கு இந்தியர்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றனர்.
முக்கியமாக இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நாடாக மட்டும் இல்லாமல் துபாய் இந்திய நிறுவனங்களுக்கும், முதலீட்டார்களுக்கும் சிறந்த இடமாக மாற தொடங்கியுள்ளது. சீனாவிடம் போட்டி போட்டு கொண்டு வரும் இந்தியா சீனாவை போலவே துபாயில் தனது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யவும், உலக சந்தையில் விற்பனை செய்வத்ற்கும் சிறந்த இடமாக துபாயை கருதுகிறது.

ராகுல், அருந்ததி மீது வழக்கு

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ஒருவர், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் மற்றும் சமூக ஆர்வலர் அருந்ததி ராய் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார். ராஞ்சியைச் சேர்ந்த ஆஷிஷ் சிங், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர். "சிமி'யைப் போல, ஆர்.எஸ்.எஸ்., ஒரு பயங்கரவாத அமைப்பு என்று, காங்., பொதுச் செயலர் ராகுல் விமர்சித்ததால், அவர் மீதும், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக அருந்ததி ராய் பேசியிருப்பதால், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 124 ஏ பிரிவின் கீழ் அவர் மீதும், ராஞ்சி நகர, ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஆஷிஷ் சிங் வழக்கு பதிவு செய்துள்ளார்

அருந்ததிராய் இல்லம் தாக்கப்பட்டது.(வீடியோ இணைப்பு)

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி குண்டகிகளால் மக்கள் போராளியும் எழுத்தாளருமான அருந்ததிராய் இல்லம் தாக்கப்பட்டது

2.11.10

அமெரிக்கா சென்ற விமானங்களில் வெடிபொருள்கள்: அமெரிக்கா அதிர்ச்சி நாடு முழுவதும் பதற்றம்

வாஷிங்டன், அக். 31- ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற சரக்கு விமானங்களில், வெடி பொருள்கள் அடங்கிய பார்சல்கள் இருந்தது, பிரிட்டன் மற்றும் துபாய் விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பயங்கரவாதிகளின் சதித் திட்டம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சல்கள், நேற்று முன்தினம் பிரிட்டன் கிழக்கு மிட்லண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட, யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன. இந்த பார்சல்கள் அனைத்தையும், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கிருந்த ஒரு பார்சலில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெடி பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வெடிபொருள் பார்சல், அங்கிருந்து அகற்றப்பட்டது. இதுகுறித்த தகவல் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதேபோல், துபாயிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட இருந்த "பெட்எக்ஸ்' நிறுவனத்தின் சரக்கு விமானத்திலும் அதே வகையான வெடிபொருள் பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சலும் ஏமன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்த தகவலும், அமெரிக்க அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

வெடி பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,"வெடி பொருள்களை அனுப்பி வைத்தது, பயங்கரவாதிகள் தான் என, நம்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. யூத வழிபாட்டு மய்யங்களை தகர்ப்பதற்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிந்துள்ளது. இது போன்ற ஆபத்துகளில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இந்திய பயணத்துக்கு பாதிப்பு இல்லை: அமெரிக்கா செல்லவிருந்த சரக்கு விமானங்களில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து, அதிபர் ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரி ஜான் பிரென்னன் கூறியதாவது: வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களால், அதிபர் ஒபாமாவின் இந்திய சுற்றுப் பயணத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்திய பயணம் திட்டமிட்டபடி நடக்கும். அதிபர், ஒரு நாட்டுக்கு பயணம் செய்கிறார் என்றால், அது தொடர்பான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்தான், பயணம் இறுதி செய்யப்படும். அந்த வகையில் இந்திய பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கெனவே முடிந்து விட்டன. இவ்வாறு ஜான் பிரென்னன் கூறினார்.


அடுத்த பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடியாம்!

தலையணையை மாற்றினால் தலைவலி போகுமா என்று சொல்லுவதுண்டு. பா.ஜ.க. மக்கள் மத்தியிலிருந்து தூக்கி எறியப்பட்டது. தொடர்ந்து இருமுறை மக்களவைத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டது. பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பை இழந்தனர்.

ஏதோ கட்சியின் தலைவர் சரியில்லை என்பதுபோல கற்பித்துக் கொண்டு தலைவர்களை மாற்றும் வேலையில் ஈடுபட்டு பா.ஜ.க. தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு திரிகிறது.
அத்வானியை பிரதமர் என்று தூக்கி நிறுத்திப் பார்த்தனர்.

பிள்ளை பிழைத்தபாடில்லை. பாகிஸ்தான் சென்றபோது ஜின்னாவை அரசியலைத் தாண்டி நான்கு வார்த்தை புகழ்ந்து சொன்னார் என்பதற்காக, அத்வானியை சங் பரிவார்க் கூட்டம் மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்து எறிந்துவிட்டது.

இன்னொரு தலைவர் ஜஸ்வந்த் சிங், அவரும் ஜின்னாவைப் புகழ்ந்தார். அத்வானியை உண்டு இல்லை என்று பிளந்து கட்டினார் - கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இப் பொழுது அவருக்கு மீண்டும் கட்சியில் ஞானஸ்நானம் கொடுத்துவிட்டனர் - ஏன் விலக்கினார்கள்? ஏன் மீண்டும் சேர்த்தார்கள்? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இவ்வளவுக்கும் மிகவும் கட்டுப்பாடான கட்சி என்று தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்பவர்கள் அவர்கள்.

கட்சிக்குப் புதிய தலைமை தேவை - அதுவும் இளைய தலைமுறையை சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று தேடி அலைந்து, சலித்து எடுத்து மும்பையில் இருந்து ஒரு தொழி லதிபரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். நிதின் கட்காரியான அவர் கடந்த ஓர் ஆண்டில் கட்சியைத் தூக்கி நிமிர்த்தவில்லை யாம். அடுத்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், கட்காரியை வைத்துக்கொண்டு காயை நகர்த்த முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறதாம்.

ஆர்.எஸ்.எஸ். வேறு - பா.ஜ.க. வேறு என்று சில சூழ்நிலை களில் அவர்கள் சொல்லுவதுண்டு. உண்மை வேறுவிதமானது தான் - பா.ஜ.க.வின் மூக்கணாங்கயிறு எப்பொழுதுமே ஆர்.எஸ்.எஸிடம்தான்.

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்தான் பா.ஜ.க.வின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று கட்சியின் விதியையே திருத்திக் கொண்டுவிட்டார்கள். நாடாளுமன்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸின் பிரதிநிதி ஒருவர் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதும் நடைமுறையாகிவிட்டது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். வேறு, பா.ஜ.க. வேறு என்பது சட்ட ரீதியாகத் தப்பித்துக் கொள்ளச் சொல்லும் தந்திரம் ஆகும்.

ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவில் கரைந்த நிலையில்கூட, ஆர்.எஸ்.எஸில் அவர்கள் உறுப்பினராகத் தொடரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டபோது - இரட்டை உறுப்பினர் முறையிலிருந்து விடுபட முடியாது என்று கூறி, ஜனதாவிலிருந்து விலகி, மறுபடியும் ஜனசங்கத்துக்குப் பதில் பாரதீய ஜனதாவைத் தொடங்கினார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் மாநிலங்களே கூடாது என்றும், மதச்சார்பற்ற தன்மையைத் தூக்கி எறிந்து ஓர் இந்துத்துவா ஆட்சியை நிறுவவேண்டும் என்றும் கருதுகிற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இதன் பொருள் மீண்டும் மனுதர்மம் கோலோச்சவேண்டும் என்பதுதான்.

அதற்காகச் சிறுபான்மை மக்களை எதிரியாக முன் னிறுத்தி வருபவர்கள்; 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப்பகலில் முக்கிய தலைவர்கள் முன்னிலையிலேயே இடித்துத் தரைமட்டமாக்கிய கூட்டம், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தண்டனையிலி ருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தண்டனை அளிக்கத் தவறியிருந்தாலும் மக்கள் மன்றம் இவர்களை வாக்குச் சீட்டுகள் மூலம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டது.

இந்த நிலையில், நரவேட்டை நரேந்திர மோடியை கட்சியின் தலைவராக்கி, குஜராத் மாடலில் இந்தியாவை பா.ஜ.க.வின் பிடியில் கொண்டுவந்துவிடலாமா என்ற நப்பாசையில் இருப்பதாகத் தெரிகிறது.

கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் அம்மையாரே வெளிப்படையாகக் கூறி விட்டார். நரேந்திர மோடியின் ஜம்பம் குஜராத்தில் மட்டும்தான் - வெளியில் செல்லுபடியாகாது என்று கூறிவிட்டார்.

கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அய்க்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி பிகார் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என்று தடை விதித்துவிட்டார்.

கோத்ராவை வைத்து சிறுபான்மை மக்களை ஆயிரக் கணக்கில் வேட்டையாடியது மூலம் இந்தியாவில் மட்டுமல்ல - உலகின் பலநாடுகளிலும் மோடியைப்பற்றித் துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டன. இதைவிட மானக்கேடு ஒன்றும் தேவையா?

இந்த நிலையில், எந்தத் தைரியத்தில் பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் நரேந்திர மோடி என்று நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மோடியின் வீர பிரதாபத்துக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.
2007 அக்டோபர் 19 ஆம் தேதி அன்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, சி.என்.என்., அய்.பி.என். (CNN -IBN) தொலைக்காட்சி நடத்துகிற சாத்தானின் வக்கீல் (Devil’s Advocate) நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மோடியைப் பேட்டி கண்டவர் புகழ் பெற்ற ஊடகவியலாளர் கரண்தப்பார் ஆவார். பேட்டியாளர் நினைக்கிற மாதிரி தன்னால் தற்போது பேச முடியாது என சொல்லி, நேர்காணல் நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறிவிட்டார். நான்கரை நிமிடமே அவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது; மிணாறு விழுங்கினார். இவர்தான் அடுத்த பிரதமராம் - பா.ஜ.க.வின் தலைவராம்.

நல்ல தமாஷ்! -------- விடுதலை தலையங்கம் (01.11.2010

அருந்ததி ராய் பேசியதில் தவறில்லை-நடவடிக்கையும் இல்லை-ப.சிதம்பரம்


டெல்லி: காஷ்மீர் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது அருந்ததி ராய் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கூட ஒரு நடவடிக்கைதான்.

ஐபிசி 124ஏ பிரிவில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், நேரடியாக ஒரு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசாத வரை, அவர்கள் மீது சகிப்புத் தன்மையைக் காட்டி நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அருந்ததி ராய் பேச்சு இந்த நிபந்தனைக்கு உட்பட்டு இருப்பதால் சட்டத்தில் கூறியுள்ளபடி அவர் மீது டெல்லி போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றார் ப.சிதம்பரம்

"நியூயார்க் கிரவ்ண்ட் ஸீரோவில் மசூதி வேண்டாம்" - சவூதி இளவரசர் வலீத்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்திற்கு அருகே மசூதியொன்றைக் கட்டுவதற்கு அங்குள்ள முஸ்லிம் அமைப்பு முனைந்திருந்ததும், ஒபாமா போன்றோர் அது உரிமை என்ற அடிப்படையில் ஆதரித்ததும் அறிந்ததே.

ஆனால் மசூதி கட்டும் திட்டத்தை தவிர்க்கும்படி உலகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் சவூதி இளவரசருமான வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் கருத்து தெரிவித்துள்ளார். இச்செய்தியை அரேபியன் பிசினஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

"நியூயார்க் மசூதி கட்டுமானத் திட்டத்தில் என்னைத் தொடர்புப்படுத்தி ஏராளமான செய்திகள் வெளியானதைப் படித்தேன். ஆனால், அவை அனைத்தும் பொய்யானவை. அந்த மசூதி திட்டத்துக்கு நான் எந்தவித நிதி பங்களிப்பும் செய்யவில்லை. இரட்டை கோபுர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. அவர்களுக்கு மதிப்பளித்து அங்கு மசூதி கட்டுவதை தவிர்க்க வேண்டும்." என்று இளவரசர் வலீத் பின் தலால் அல் சவூத் தெரிவித்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது

சென்னை இரத்த தான விருது: 46 கேடயங்களை பெற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடம்

கடந்த 30-11-2010 ஆம் நாள் சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில இரத்தப் பரிமாற்று மையம் சென்னை நகரத்தில் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு விருது வழங்கும் விழா மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை மாநகராட்சி குடும்பநலத்துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ், எயிட்ஸ் தடுப்பு மற்றும் கட் டுப்பாடு மையத்தின் திட்ட இயக்குனர்கள் அ. அமுதா மற்றும் பெ. அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த மூன்று ஆண்டுகளாக இரத்ததானம் செய்யும் தன்னார்வ அமைப்புகளில் தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரு கின்றது. அல்ஹம்துலில்லாஹ். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இந்த ஆண்டு சென்னை நகரில் மட்டும் 3100 யூனிட் இரத்த தானம் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அல்ஹம் துலில்லாஹ்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்ஆர்வ சேவையைப் பாராட்டி அதற்கான விருதினை மாநிலச் செயலாளர் சகோ. அப்துல் ஜப்பார் அவர்களிடம் வழங்கினார்.

மேலும் 100 யூனிட்டுகளுக்கு அதிக மாக இரத்ததானம் செய்த மாவட்டங்களுக்கும் கிளைகளுக்கும் தனித்தனியாகக் கேடயங்கள் வழங்கப்பட்டன. வந்திருந்த அமைப்புக ளில் டிஎன்டிஜேயே அதிகமாக கேடயங்களை அள்ளிச் சென்றது.

வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சி கிழக்கு, காஞ்சி மேற்கு மாவட்டங் கள் மற்றும் கிளை நிர்வாகிகள் சேர்த்து மொத்தம் 46 கேட யங்களைப் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வழங்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் இந்துக்களின் நலன் விரும்பிபோல் நடித்து இந்துக்களை ஏமாற்றுகின்றது! – இந்து மஹா சபை குற்றச்சாட்டு!

ஆர் எஸ் எஸ் இந்து சமூகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றது. தனது சொத்தை பெருக்கிக் கொள்வதற்காக அயோத்தி நிலத்தை கைபற்ற ஆர் எஸ் எஸ் முயலுக்கின்றது. இந்து மஹா சபை மற்றும் நிர்மோகியை தவிர வேறு யாருக்கம் அதில் உரிமை கிடையாது. என்று அனைத்து இந்திய இந்து மஹா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது..

இந்து மஹா சபையின் செய்தி தொடர்பாளர் கஸத்ரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்தியாவில் இந்து சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அவல நிலையை உருவாக்கியதே இந்த ஆர் எஸ் எஸ் தான்.. ஆரம்பத்திலிருந்தே இந்துக்களின் நலன் விரும்பி போல் தன்னை காட்டிக் கொண்டு இந்துக்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது என குற்றம்சாட்டியுள்ளார்.. பிடிஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இந்த சண்டையில் ஆர் எஸ் எஸ் யின் உண்மை முகம் அவர்களாளேயே வெளிப்பட்டதோடு இவர்கள் ராமர் மீது கொண்டுள்ள பக்கதியினால் ராமருக்கு கோவில் கட்ட பாபர் மஸ்ஜித் இடத்தை கேட்கவில்லை தங்களது சொத்துக்களை பெருக்கிக் கொள்வதற்காகவே இது போன்று மக்களை ஏமாற்றுகி்ன்றனர் என்பதும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்!