இஸ்லாமாபாத்:இந்தியா-பாகிஸ்தானுக்கிடையேயான கஷ்மீர் தர்க்கம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்களுக்கு காரணம் பிரிட்டனின் காலனியாதிக்கக் கொள்கைதான் என பிரிட்டனின் பிரதமர் டேவிட் காமரூன் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கிடையே சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரிட்டனின் கடந்த கால வீழ்ச்சிகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் காமரூன்.