செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக்(artificial pacemaker), கண்டுபிடித்த வில்சன் கிரேட்பாட்ச் தனது 92வது வயதில் நேற்று நியூயோர்க்கில் காலமானார். இதயமுடுக்கி முதன்முதலாக 1960 ஆம் ஆண்டில் மனிதருக்குப் பொருத்தப்பட்டது. இதன் மூலம் இதயத் துடிப்பு ஒரே சீராக இயங்க வைக்கப்படுகிறது. தற்போது, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இதனைப் பொருத்தி வருகின்றனர்.