ஹைதராபாத், அக். 4- ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் நவம்பர் முதல் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளது.
மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி இதற்கான கோப்பில் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி கையெழுத்திட்டார். இது குறித்து ஆந்திர மாநில அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மாநில அரசு அமுல்படுத்த முடிவெடுத்துள்ளது.
