கும்பினியாட்சியை நிலைநாட்டுவதற்கு மீர்ஜாபர், ராபர்ட் கிளைவுக்கு சேவை செய்ததைப் போல, அமெரிக்க மேலாதிக்கத்தை இந்தியாவில் திணிப்பதற்கு மன்மோகன்-சோனியா கும்பல் விசுவாச அடியாளாகி நிற்கிறது. மான ஈனமற்ற அமெரிக்க அடிமைத்தனத்திற்குப் புதிய இலக்கணம் படைத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை விசுவாசமாகவும் வெறியோடும் நடைமுறைப்படுத்தி வருவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் இந்தியாவை இறுகப் பிணைக்கும் நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபட்டு, இந்தியாவை அமெரிக்காவின் விசுவாச அடியாளாக வளர்த்தெடுப்பதிலும்
