பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில் இயங்கி வரும் தி கிருஷ்டி கேன்சர் மருத்துவமனையில் ரமணி ராமசுவாமி என்பவர் கடந்த 6 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். எக்ஸ்ரே பிரிவில் ரேடியோகிராபராக வேலை பார்த்து வந்த அவருக்கு சரியாக ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அவரால் நோயாளிகள் மற்றும் சக தொழிலாளர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியாமல் பிரச்சினை எழுந்
துள்ளது.இதனால் திறன் குறைபாடு குறைந்தவர் என்று கூறி ஹெல்த் கேர் பிரபெசன் கவுன்சில் அவரை பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
மலேசியாவில் வேலை பார்த்த எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. என்னை இங்கு தகுதியில்லாதவன் என்று கூறி வேலை நீக்கம் செய்துள்ளது முறையற்றது. நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன் மற்றபடி நான் எந்த நோயாளிக்கும் தீங்கு இழைக்கவில்லை என்று ரமணி ராமசாமி கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக