தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.11.12

ஐ.நா அதிகாரிகளை திபெத் செல்ல சீனா அனுமதிக்க வேண்டும் - சங்காய்


ஐ.நா அதிகாரிகள் தீபேத் செல்வதற்கு, சீனாவின் புதி ய அரசு அனுமதியளிக்க வேண்டும் என தீபேத்தின் அரசியற் தலைவர் லோப்சாங் சங்காய் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று சனிக்கிழமை தீபேத்தின் தர்ம சாலாவில் இருந்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.தீ பேத்தின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவுக் கு கீழ் இயங்கும் அரசியற் தலைவரான சங்காய் இது தொடர்பில் மேலும் கூறுகை
யில்:சமீபத்தில் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பி ன் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, திபெத் மீது அதிக கரிசனை காண்பித்திருப் பதும்,  சீனாவுக்கான அமெரிக்கத் தூதுவர் காரி லொக்கேவின் திபெத் விஜயமு ம் அங்குள்ள நிலைமைகள் குறித்து அவசரமாகப் பிரகடனம் செய்ய வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளன.
தீபேத்தியர்களின் உலகளாவிய அபிலாஷைகளை அங்கு அனுமதிப்பதுடன் மேதகு தலாய் லாமா தனது வீட்டுக்குத் திரும்பவும் தீபேத்தியர்கள் விடுதலை பெறவும்,  சர்வதேச சமூகம் தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். இது எமது விண்ணப்பம்' என்றார்.
மேலும், டிசம்பர் 10 ஆம் திகதி உலகளாவிய ஒற்றுமைக்காக தீபேத்தியர்களும் உலகம் முழுதும் வசிக்கும் அவர்களின் ஆதரவாளர்களும் ஒன்று கூட வேண்டும் என்றார்.

தீபேத்தியர்களின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தஞ்சமடைந்து வசித்து வருகின்றார்.
வடக்கு இந்தியாவில் உள்ள மலைப்பிரதேச நகரமொன்றில் இருந்து தீபேத்தின் நாடுகடந்த அரசை அவர் வழிநடத்தி வருகின்றார்.
அண்மையில் CTA (Central Tibetan Administration) எனப்படும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது லோப்சாங் சாங்காய் கருத்து தெரிவிக்கையில், 'சுதந்திர தீபேத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்த துறவிகள் மீதான பொறுப்பு தம்மிடம் உள்ளது' என்றார். CTA அமைப்பு கருத்துரைக்கையில் வியாழக்கிழமை வட தீபேத்தில் தீக்குளித்த துறவியுடன் சேர்த்து மார்ச் 2009 இலிருந்து இன்று வரை அங்கு தற்கொலை செய்து கொண்ட துறவிகளின் எண்ணிக்கை 80 எனவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இவ்வெண்ணிக்கை 18 எனவும் கூறியுள்ளது.

0 கருத்துகள்: