தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.11.12

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை படம்பிடிக்க தடை


தற்போது சீன தலைநகர் பெய்ஜிங்கில் பதட்டமான நிலையில் நடந்து கொண்டிருக்கும் சீன கம்யூனிஸ் ட் கட்சியின் மாநாட்டை படம்பிடிக்கக் கூடாதென்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.சீன தொலைக்காட்சி சேவை 2 இது குறி த்து தகவல் வழங்கும்போது உள்ளே நடப்பதில் புது மை எதுவும் கிடையாது என்றும் வழமையான சடங் குகளே அங்கு நடைபெறுவதாகவும்,தெரிவிக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி
பத்து வருடங்களுக்கு ஒரு தடவை கூடுவதும் இது போல அதிகார மாற்றம் செய்வதும், 350 செயற்குழு உறுப்பினர்களை நியமிப் பதும் வழமையான சம்பிரதாயங்களாகும்.
உள்ளே நடக்கும் கூத்தாட்டம் மக்களுக்கு தெரியவிடாமல் தடுத்து, மக்களை ஆட்சி செய்ய தாளாத ஆசை கொண்டுள்ள சீனச் சர்வாதிகாரம் இன்னமும் மாறவில்லை என்பதற்கு இந்தத் தடை நல்ல உதாரணமாக இருக்கிறது.
இதற்கிடையில் சீன அரச தொலைக்காட்சி கவனத்தைத் திசை திருப்புவதைப்போல இன்று விண்வெளி ராக்கட் ஏவும் செய்தியை பறக்கவிட்டு சீனர்களை ஆகாயம் பார்க்க வைத்தது.
அடுத்த ஆண்டு யூன் மாதம் நடுப்பகுதியில் சீனாவின் ஆளுள்ள ராக்கட் ஏவப்படும் என்றும், மூன்று விண்வெளி வீரர்களுடன் பறந்து அது விண்மேடைக்கு செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மூவரில் ஒருவர் பெண் விண்வெளி வீரர் என்றும் கூறியுள்ளது, சீனர்கள் ஆளுள்ள விண்கலத்தை சந்திரத்தரைக்கு அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
சீனாவில் ஏற்பட்டுள்ள உள்ளக ஊழலையும், கம்யூனிசத்தின் பின்னடைவையும் மூடி மறைக்க சந்திரனுக்கு வெற்றிகரமான சீன விண்வெளி வீரரை அனுப்பியாக வேண்டிய தேவை உள்ளது.
அமெரிக்கர்கள் சந்திரத்தரை போல செட் போட்டு, ஆம்ஸ்ரோங்ககை நடக்க வைத்து எடுத்த போலிப் புகைப்படங்கள் பல வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே.
எனவே போலிப் புகைப்படங்களை எடுத்து உலகின் காதில் பூ சுற்ற இயலாத நேரத்தில் சீனாவின் பயணம் ஆரம்பிக்கிறது.
1967 ற்கு பின் ஏன் அமெரிக்கர்களோ, ரஸ்யர்களோ சந்திரமண்டலத்திற்கு மனிதனை அனுப்பவில்லை என்ற கேள்வியின் மர்மம் இன்றுவரை வெளியாகவில்லை.
சில மாதங்களுக்கு முன் நீல் ஆம்ஸ்ரோங் மரணமடைந்துவிட்டார், அத்தருணம் கருத்துரைத்த நாஸா சந்திரனில் நட்ட அமெரிக்கக் கொடியை காணவில்லை என்று தெரிவித்த வேடிக்கையும் சீனர்களை கலக்கத்தில் ஆழ்த்தாமல் இருக்க முடியாது.
நேற்று ஸீ பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக பதவியேற்றுவிட்டார், அவர் இனி முறைப்படி அதிபராவார், வரும் பத்தாண்டுகளுக்கு அவர் வைத்ததே சட்டம்.
ஆனால் சந்திரத் தரையில் சீனக் கால்களை இந்தியாவுக்கு முன் பதிக்க வைக்க வேண்டிய நெருக்குவாரம் அவருக்கு இருக்கிறது.
சர்வதேச விவகாரத்திலும் சீனா தோல்விப்படியிலேயே இருக்கிறது, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சீனாவை முதலிடத்தில் கொண்டுவர செய்வதற்கு இவர் பத்தாண்டுகளை பரிசாகப் பெற இருக்கிறார்.

0 கருத்துகள்: