யோகா குரு பாபா ராம்தேவின் யோகா பயிற்சி மையங்கள் ரூ.5 கோடி வருமானத்திற்கு முறையாக வரி கட்டவில்லை என கூறி மத்திய அரசு தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்ப ட்டுள்ளது.ஹரித்வாரில் அமைந்துள்ள ராம்தேவின் இரு யோ கா அமைப்புக்களான பதஞ்சலி யோகா பீடம், மற்றும் திவ்ய யோகா டிரஸ்ட் ஆகியவை மக்களிடம் யோகா கற்றுத்தருவ தாக கூறி அதற்கு கட்டணமாக வசூலித்த தொகை ரூ.5.14 கோ டிக்கு முறையாக வரி கட்டவில்லை எனவும் இதற்கு விளக்க ம் கேட்டே வருவாய்த்துறையினர் நோட்டீஸ்
அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
இந்தியாவின் கறுப்பு பணத்தை வெளிநாடுகளிலிருந்து மீண்டும் கொண்டுவரவேண்டும் என கூறி அண்மைக்காலமாக மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் யோகா குரு பாபா ராம்தேவ். அவர் தனது யோகா பயிற்சி மையங்கள் மூலமாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதுடன், தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளை வெளிநாடுகளுக்கும், இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறார்.
தமது நான்கு பயிற்சி மையங்கள் உட்பட தனது சொத்துக்களின் மொத்த பெறுமதி ரூ.426.19 கோடி எனவும் அண்மையில் அறிவித்திருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக