தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.11.12

காஸ்ஸா:கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியது இஸ்ரேல்!


காஸ்ஸா:ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி காஸ்ஸா மக்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கடலோரப்பகுதியில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் வரை மீன்பிடித் தொழில் நடத்த ஃபலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. முன்னர் 3 நாட்டிகல் மைல் வரை மட்டுமே மீன்பிடித்தொழில் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஃபல
ஸ்தீன் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு என்று மீனவர் தொழிலாளர்கள் அமைப்பின் தலைவர் மஹ்ஃபூஸ் கபாரிதி தெரிவித்துள்ளார். 3500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவரது அமைப்பின் கீழ் பணிபுரிகின்றனர்.
இஸ்ரேல் எல்லைக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் காஸ்ஸா மக்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. முன்பு இங்கு நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாக நீண்ட இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியின் மத்தியஸ்தத்தில் கடந்த புதன் கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

0 கருத்துகள்: