விடுமுறைக்காக அமெரிக்காவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற ஒரு பெண், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்புகையில், விமான அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்ததால், உடல்நலமின்றி மரணம் அடைந்தார்.www.thஅவர் மரணம் அடைந்ததற்கு காரணம் அவரது அதிகப்படியான எடைதான். அவருடைய எடை 192 கிலோ என்பதுதான் அவரது பிரச்சனை. மேலும் அவர் ஒரு காலை இழந்த ஒரு
மாற்றுத்திறனாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் இருந்து Vimla Soltesz, என்ற அமெரிக்க நாட்டு பெண்ணும், அவருடைய கணவர் Mr. Soltesz என்பவரும் நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் ஹங்கேரி நாட்டிற்கு சென்றனர். மிகவும் சிரமப்பட்டுதான் அவர் விமானத்தில் ஏற்றப்பட்டார். ஹங்கேரியில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு, மீண்டும் நியூயார்க செல்வதற்காக ஹங்கேரி விமான நிலையத்தில் காத்திருந்தபோதுதான் பிரச்சனை ஆரம்பமானது.
www.thedipaar.com
Mrs.Vimla Soltesz, ன் உடல் மிகவும் பருமனாக இருப்பதால், விமான இருக்கையில் அவருடைய அளவுக்கேற்ற பெல்ட் இல்லை என்ற காரணத்தாலும், ஹங்கேரி விமானத்தின் இருக்கை அவருடைய உடலை தாங்கக்கூடியதாக இல்லை என்பதாலும், அவரை விமானத்தில் ஏற்ற ஹங்கேரி விமான நிலைய அதிகார்கள் மறுத்தனர். எனவே அவர்கள் பலமணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்தனர். பின்னர் மீண்டும் ஒரு விமானத்தில் ஏற முயற்சி செய்தனர். அவருக்காக அந்த விமானத்தில் மூன்று இருக்கைகள் ஒன்று சேர்த்து தயார் செய்யப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு அவரை விமானத்தில் ஏற்றினர். ஆனால் விமான கேப்டன், மூன்று நபர்கள் செல்லும் இருக்கையில் ஒரு நபரை அனுமதிக்க முடியாது என கூறி, அவர்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டார். www.thedipaar.com
மிகுந்த சோகத்துடன் இருந்த அந்த தம்பதிகள் ஹங்கேரியில் தனது உறவினர் ஒருவரின் வீட்டிலேயே தங்கினர். அங்கு Mrs.Vimla Soltesz பரிதாபமாக உடல்நலமின்றி மரணம் அடைந்தார். தனது மனைவியின் மரணத்திற்கு விமான நிறுவனமே காரணம் என ஹங்கேரி கோர்ட்டில் அவருடைய கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். விமான நிறுவங்களின் பொறுப்பற்ற செயலால் பரிதாபமாக ஒரு உயிர் பிரிந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக