கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்சங்கம் அமைந்து ள்ள ஒழுங்கைக்கு 'தமிழ்ச் சங்க ஒழுங்கை' என பெ யர் மாற்றத்தைநடைமுறைப்படுத்த விடாது சில இ னவாத குழுக்கள் தடுக்க முயல்வதாக ஜனநாயக ம க்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நா டாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரி வித்துள்ளர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில் மாநகரசபை உறுப்பினர் வேலணை
வேணி யனின் முயற்சியின் மூலம்இவ்வொழுங்கை தமிழ்ச்சங்க ஒழுங்கை என பெ யர் மாற்றம் பெறுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. இரு ப்பினும் இனவாதிகளினால் இம்முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. தலைநகரில் தமிழ் வளர்வதற்கு அர்ப்பணிப்பை செய்திருக்கும் தமிழ்ச்சங்கத்தின் பெயரை இவ்வொழுங்கைக்கு சூடுவது பொருத்தமான செயலாகும். இதனை தடுப்பது ஜனநாயக விரோத இனவாத செயலாகும்.

கொழும்பு வெள்ளவத்தையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றார்கள். இப்பகுதியில் ஐ.டி.சி. ரோட் என்ற சர்வதே பௌத்த மதத்தை குறிக்கும் ஒழுங்கை உள்ளது. இதனை தமிழர் எவரும் எதிர்க்கவில்லை.
அப்படியிருக்கும் பொழுது தமிழ்ச்சங்க ஒழுங்கைக்கு பெயர் மாற்றத்தை மட்டும் தடை செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது. இது சம்பந்தமாக உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றுள்ளேன்.
தலைநகரில் தமிழ் மொழி வளர்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் இனவாதிகளினால் தடுக்கப்படுமேயானால் பாரிய விளைவை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக