தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.12

ஐரோப்பாவில் வேலையில்லாத திண்டாட்டம் திடீர் உயர்வு


ஐரோப்பாவில் கடந்த செப்டெம்பர் மாத கணிப்புக்க ளின்படி வேலையில்லாத் திண்டாட்டம் 10.3 வீத மாக உயர்வு கண்டுள்ளது.அதேவேளை யூரோ நாண யத்தை பாவனைப்படுத்தும் 17 நாடுகளிலும் வேலை யில்லாத் திண்டாட்ட அளவு 11.6 வீதமாகக் காணப்ப டுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.யூரோ சோ ன் என்று கூறப்படும் யூரோ நாணய பாவனை நாடுக ளில் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 0.1 வீதம் செப்டெம்பரில் உயர்ந்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத் தில் தற்போது 26
மில்லியன்பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், இந்தத் தொகை குறுங்காலத்தில் 2 மில்லியன் அதிகரிப்பு கண்டுள்ளது.
இது ஒருபுறம் சிக்கலாக இருக்க மறுபுறம் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல அமெரிக்காவின் ஜெனரல் மோட்டோஸ் நிறுவனம் ஐரோப்பாவில் உள்ள தனது கார் உற்பத்தி நிறுவனங்களில் 2600 பேருக்கு வேலை நீக்கக் கடிதம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
அத்தோடு நில்லாமல் ஓபல் கார்களை உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது, இதேவேளை நேற்று முன்தினம் சுவிஸ் வங்கி 10.000 பேருக்கு வேலை நீக்கக் கடிதங்களை வழங்க இருப்பதாக தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சுமார் ஒரு பில்லியன் யூரோ அளவில் பிரிட்டனின் உதவி கிடைக்கும் என்றும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரிட்டன் இந்த நல்ல செய்தியை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோனின் முகத்தில் குத்து விழுந்ததைப் போல இது குறித்து பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்துள்ளது, அவருடைய கட்சி உறுப்பினரில் பலரே இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
கீழ்ச்சபை வாக்கெடுப்பில் 307 – 294 வாக்குகள் அடிப்படையில் இது தோற்கடிக்கப்பட்டுள்ளது டேவிட் கமரோனுடைய அரசியலுக்கு சமீபத்தில் விழுந்துள்ள பேரிடி என்று கூறப்படுகிறது.
மறுபுறம் பொருளாதார நெருக்கடியால் சிக்குண்டுள்ள ஸ்பானியா நாட்டின் தலைநகர் மாட்றிட்டில் உள்ள மருந்துக் கடைகளில் வைத்தியர் வழங்கும் பற்றுச்சீட்டை காட்டி மருந்தெடுக்கும் ஒவ்வொருவரும் ஒரு றிசீட்டுக்கு ஒரு யூரோ செலுத்த வேண்டுமென அறிவித்துள்ளது.
இதன் மூலம் திரட்டப்படும் பணத்தில் மருந்து விற்பனைக் கடைகளை நவீனமயப்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் ஐரோப்பாவின் மற்றய நாடுகளுக்கும் பரவி மக்களுக்கு தேவையில்லாத தொல்லையை தரப்போகிறதோ என்ற அச்சம் மற்றய நாடுகளில் ஏற்பட வழியுண்டு.
டென்மார்க் அரசு கொழுப்பு பொருட்களுக்கான வரியை ( மொம்ஸ் ) அதிகரிக்க அதை மற்றய நாடுகளும் பின்பற்ற ஆசை கொண்டது போன்ற அபாயம் இதில் உள்ளது.
இனி மருந்து பற்றுச்சீட்டுக்கு பணம் என்ற கூத்து எந்த நாட்டில் அறிமுகமாகப்போகிறது என்ற ஆவல் பிறந்துள்ளது.

0 கருத்துகள்: