தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.12

அனைவருக்கும் இலவச மருந்து திட்டம் : பிரதமர் தொடக்கிவைப்பு


நாடு முழுவதும் அரச மருத்துவமனைகளில், இலவ ச மருந்து எனும் புதிய திட்டத்தை தொடக்கி வைத்து ள்ள பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்தின் மூலம் ஏழைகள், சாதாரன குடிமக்கள் மிகவும் பயன் அடை வார்கள் என்று தெரிவித்துள்ளார்.சுமார் ரூ 540 கோடி செலவில் இத்திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப் படுத்துகிறது. மூன்றாம் தர மற்றும் நடுத்தர குடிமக் களுக்கு இத்திட்டம் நிச்சயமாக அதிக பயனை தரக் கூடியது. அவர்களுக்கு
ஆகும் கூடுதல் செலவுகள் தவிர்க்கப் படும் என்கிறார் பிரதமர்.

    மேலும் இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு செவிலியர், மருத்துவர்களை அதிக அளவில் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை தீரும் எனவும் கூறியுள்ளார்.

தற்போது தொடங்கப்படும் இத்திட்டம், இன்னமும் இரு வருடங்களுக்குள் நாடளாவிய ரீதியில் முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும், 2017 ம் ஆண்டளவில், 52% வீதமான இந்திய மக்களுக்கு இலவச மருந்துகளை வழங்கக்கூடிய இலக்கை நிர்ணயித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மருந்துகளுக்காக சில பிராண்டுகளை மாத்திரமே பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படவுள்ளது.

0 கருத்துகள்: