தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.11.12

மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம். தமிழகத்தில் அல்ல..அமெரிக்காவில்.


அமெரிக்காவில் சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட நியூயார்க் மக்கள் மின்தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மின்சார அலுவலகத்தை ஏராளமான மக்கள் முற்றுகையிட்டு நேற்று கோஷம் எழுப்பினர். அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோர பகுதிகளை சாண்டி புயல் புரட்டி போட்டது. இதனால் பஸ், ரயில், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. 2 முறை சாண்டி புயல் தாக்கியதால், நியூயார்க், நியூஜெர்சிநகரங்களில் ஸ்தம்பித்தன. மின் தடையால் லட்சக்கணக்கான மக்கள்

பாதிக்கப்பட்டனர்.
சூறாவளி காற்றால் மின் கம்பங்கள், தொலைதொடர்பு கம்பிகள் அறுந்தன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மீட்புப் படையினர் போர் கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். எனினும், பல இடங்களில் மின் தடை இன்னும் நீடிக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் மின்சாரம் இன்றி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வியாபார நிறுவனங்களும் பாதிக்கப்பட் டுள்ளன.

இதனால் ஆத்திரம் அடைந்த நியூயார்க் மக்கள் ஏராளமானோர் நேற்று லாங் ஐலேண்ட் மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருட்டில் உட்கார்ந்திருக்கிறோம். மின் சப்ளை வழங்க யாரும் வரவில்லை. மின் துறை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போன் செய்தால் மின்துறை அலுவலகத்தில் இருந்து சரியான தகவல்கள் கூறுவதில்லை என்று கோஷமிட்டனர்.
இதுகுறித்து மின்சார அலுவலக தலைமை நிர்வாகி மைக்கேல் ஹார்வே கூறியதாவது: மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து வேதனையாக இருக்கிறது. எனினும், வழக்கமான நேரங்களில் 200 லைன்மேன்கள்தான் வேலை பார்ப்பார்கள். சாண்டி புயலுக்கு பின்னர் 6,400 லைன்மேன்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் 3,700 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மின்சார அலுவலகத்திடம் இருந்து சரியான தகவலை பெற முடியவில்லை என்று பலர் குற்றம் சாட்டி உள்ளனர். அது ஓரளவு உண்மைதான். ஏனெனில், மின்சார அலுவலகத்தில் இப்போதுள்ள தொழில்நுட்பம் மிக பழமையானது. இதை நவீனமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணி முடிந்ததும் மின் நுகர்வோர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் எளிதில் கிடைக்கும்.

0 கருத்துகள்: