தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.11.12

விமான பணிப்பெண்கள், தலைமுடியை மறைத்து முக்காட்ட்டு வர எகிப்து அரசு உத்தரவு.

விமான பணிப்பெண்கள், தலைமுடி யை மறைக்கும் விதத்தில், முக்காடிட் டு பணிக்கு வர வேண்டும்,'' என எகிப் து அரசு, வலியுறுத்தியுள்ளது.எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் ஆட்சி யில் இருந்தவரை, முஸ்லிம்களுக்கா ன கட்டுப்பாடுகள் ஏதும் பெரிய அள வில் விதிக்கப்படவில்லை. மக்கள் புர ட்சி மூலம், கடந்த ஆண்டு, முபாரக்,
ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்த லில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி வெற்றி பெற்றது. முகமது முர்சி அதிபரா கியுள்ளார்.

இந்த ஆட்சியில்,இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கைகள் அதிகம் பின்பற்றப்படுகின்றன. "டிவி' நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பர்தா அணிய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. "தற்போது, விமானப்பணி பெண்களும், தலைமுடியை மறைக்கும் விதத்தில் முக்காடிட்டு பணிக்கு வர வேண்டும்' என, உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.எகிப்து விமானத் துறையில், 900 பணி பெண்கள் உள்ளனர். இவர்கள், பணியில் இருக்கும் போது, முக்காடிட்டு கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: