அமெரிக்க ரெக்ஸ்சாசில் சுமார் 100 முதல் 150 கார்கள் மோதிக்கொண்டன, இருவர் மரணித்து 80 – 120 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.எட்டு முதல் பத்துப்பேர் மோசமா ன காயமடைந்துள்ளனர், ஒரு விபத்து கொத்தா க பல விபத்துக்களை ஏற்படுத்திவிட்டது.இதில் 150 வாகனங்கள் சிக்குண்டு சின்னாபின்னமான து ஆச்சரியமூட்டுவதாகும்.இது இவ்விதமிருக் க :கடந்த புதன் கிழமையன்று இஸ்ரேலின் டெ ல்அவிவ் நகரத்தில் பேருந்தில் வைக்கப்பட்ட குண்டில் 29 பேர் படுகாயமடை
ந்தது தெரிந்ததே.இந்தச் சம்பவத்தில் தொடர்பு டைய இருவரை வெஸ்ற்பாங் ரமல்லாவில் வைத்து இஸ்ரேல் கைது செய்து ள்ளதாக அறிவித்துள்ளது.
இவர்கள் ரெல்அவிவ்வில் குண்டை வைத்துவிட்டு, றமலாவுக்கு எப்படி வியாழனே வந்து சேர்ந்தார்கள் என்பது குழப்பமாக உள்ளது, ஆயினும் கைது நடந்துள்ளது.
யுத்த நிறுத்தம் அமலில் இருந்தவேளை பாலஸ்தீன இஸ்ரேலிய எல்லையில் பாலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேலியப் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
யுத்த நிறுத்தம் இருந்தாலும் தமது கோபம் மறுபடியும் வெடிக்கும் என்பதை இந்தக் கொலை மூலம் உணர்த்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் புதன் யுத்த நிறுத்தம் அமலுக்கு வந்தது, ஆனாலும் அதனுடைய தூவானம் விடவில்லை இஸ்ரேலின் தரப்பில் குரல் தரவல்ல பெண் அதிகாரி இதுபற்றி இன்னமும் வாய் திறக்கவில்லை.
சுமார் ஒரு வாரகாலமாக நடைபெற்ற மோதலில் 130 பாலஸ்தீனரும் 5 இஸ்ரேலியரும் கொல்லப்பட்டனர்.
ஒன்றுக்கு இருபத்தியாறு என்ற கணக்கில் இஸ்ரேலின் படுகொலை பட்டியல் இருக்கிறது, ஆரம்பத்தில் இது 1 : 30 என்றளவில் மோசமாக இருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக