தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.10.12

பாரீஸில் தங்கச்சங்கிலி பறிப்பு குற்றங்கள் அதிகரிப்பு. சுற்றுலா பயணிகள் கவலை.

தங்கம் விலை உயர்வால், பிரான்ஸ் நாட்டில் சங்கி லி பறிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளன. தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில், நாளுக்கு நாள் அதிகரி த்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, உள் ளூர் சந்தையிலும் தங்க நகைகளின் விலை உயர்ந் து வருகிறது. உலகிலேயே, தங்க நகைகள் அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. எனவே, பல நகரங்க ளிலும் சங்கிலி பறிப்பு குற்றங்களும், பீரோவை உ டைத்து தங்க நகைகளை கொள்ளையடிக்கும் சம்ப வங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தியா மட்டு மல்லாது, தற்போது பிரான்ஸ் நாட்டிலும் இந்த குற் றங்கள் அதிகரித்துள்ளன. 
இது குறித்து பாரிஸ் நகர போலீஸ் அதிகாரி குறிப்பிடுகையில், "கடந்த ஒன்பது மாதங்களில், சங்கிலி பறிப்பு குற்றத்துக்காக, 270 பேர், கைது செய்யப்பட்டனர். ஜூன் மாதத்தில் மட்டும், தங்க சங்கிலி பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பாக, 635 புகார்கள் பதிவு செய்யப்பட்டன' என்றார். தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அதிகரித்துள்ளது, சுற்றுலா பயணிகளை கவலையடைய செய்துள்ளது.

0 கருத்துகள்: