தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.10.12

நீதிபதிகள் மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை – தலைமை நீதிபதி இக்பால் எச்சரிக்கை!


சென்னை:நீதிபதிகளில் மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற விழாவில்,புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 167 உரிமையியல் நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசிய அவர், “பொதுமக்கள் கடைசியாக நிவாரணம் தேடி வருவது நீதிபதிகளிடம்தான். எனவே, விமர்சனத்துக்கு ஆளாகாமல்
செயல்பட வேண்டும்.தமிழகத்தில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர் மீது புகார்கள் வந்துள்ளன.இந்தப் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் உரிமையியல் நீதிபதியாக இருந்தாலும்,மாவட்ட நீதிபதியாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒரு நீதிபதி மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டால் அவர், வழக்கறிஞர் தொழிலுக்கு திரும்பி விடலாம்.
நீதிபதிகள் மீது புகார் தெரிவித்து வரும் கடிதங்கள் மீது அதிக முக்கியத்துவம் அளிக்க மாட்டோம்.அதேநேரத்தில் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தயங்காது.தற்போது நீதிபதிகள் மீது மக்கள் தவறான எண்ணம் கொண்டுள்ளனர்.அது மாற வேண்டும்.
அரசு ஊழியர்கள் தவறு செய்தால் அதனைக் கண்காணிக்க ஊழல் தடுப்பு பிரிவு இருப்பதுபோல, நீதிபதிகள் தவறு செய்தால் கண்காணிக்க உயர் நீதிமன்றத்திலும் ஊழல் தடுப்பு பிரிவு உள்ளது.
நீதிபதிகளின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 50 வயதில் பணி நீக்கம் செய்யப்பட்டால் உங்கள் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.சமூக கூட்டங்களில் பங்கேற்பதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும்.நீதியின் மாண்பைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டால் உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம் வரை நீங்கள் செல்லலாம்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எனவே, சாதாரண மக்களும் நீதிபதிகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழலை ஒழிக்க பல்வேறு இயக்கங்கள் தற்போது தோன்றியுள்ளன.நீதிபதிகளாகிய நீங்கள் ஊழல் புகாருக்கு ஆளாகக் கூடாது.
மூத்த நீதிபதிகள், மாவட்ட நீதிபதிளுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
நன்றி: தூது ஆன்லைன்

0 கருத்துகள்: